தீபாவளிக்கு 10000 வாலா சரவெடியா வெடிக்கும் அமரன் – ஜெயம் ரவியின் பிரதர், கவினின் பிளடி பெக்கர் என்ன ஆச்சு?

First Published | Oct 31, 2024, 8:48 AM IST

Amaran vs Brother: தீபாவளி வெளியீடான அமரன் திரைப்படம், சிவகார்த்திகேயனின் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பிற்கு பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படம், ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களால் நிரம்பியுள்ளது.

Amaran Review

Amaran vs Brother: தீபாவளி திருநாளான இன்று அமரன், பிரதர், பிளடி பெக்கர் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன.  சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள அமரன் படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் ஆரோ, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷ்யாம் மோகன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

Sivakarthikeyan, Amaran Movie Review

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய அமரன் படம் இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பயணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் சிவகார்த்திகேயன் பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் முதல் முறையாக ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக இராணுவ வீரன் கதாபாத்திரத்தில் நடித்து மாஸ் காட்டியிருக்கிறார்.

Tap to resize

Sivakarthikeyan and Sai Pallai - Amaran Movie Twitter Review

கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அமரன் படத்தை தயாரித்துள்ளது. தமிழ்நாட்டைத் தவிர மற்ற மொழிகளில் அதிகாலை 4 மணிக்கே வெளியான அமரன் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது. அமரன் படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளை பிரதிபலிக்கிறது. இதில் குறை சொல்வதற்கு எதுவும் இல்லை என்று ரசிகர்கள் அமரன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

அருமையான தருணங்கள் ஏராளமாக உள்ளன. நேர்த்தியான மற்றும் டுவிஸ்ட் கொடுக்கும் முதல் பாதி. இடைவேளை வரையில் வழக்கமான மசாலா காட்சிகள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு காட்சியும் கதைக்களத்துடன் ஒத்து செல்கிறது. ஆனால் ஒரு போதும் ரசிகர்களை சலிப்படைய வைக்கவில்லை.

Amaran vs Brother vs Bloody Beggar

அமரன் படத்தின் முதல் பாதி உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது. எஸ்கேயின் பயணம் பவர்புல்லாக இருக்கிறது. சாய் பல்லவியின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. இடைவேளை காட்சி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது இந்திய இராணுவத்தின் முகம். லவ்வர் பாயாகவும், ராணுவ வீரராகவும் ஜொலிக்கிறார். இடைவேளையில், பயங்கரவாதிகளை வீழ்த்திய பிறகு, "இது இராணுவத்தின் முகம்" என்று பயங்கரமாக டயலாக் பேசுகிறார்.

Amaran vs Brother vs Bloody Beggar

இப்படியெல்லாம் அமரனை கொண்டாடும் ரசிகர்கள் ஜெயம் ரவியின் பிரதர் மற்றும் கவின் நடித்த பிளடி பெக்கர் படங்களுக்கு எந்தளவிற்கு வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள் என்பதை படம் வெளியான பிறகு பார்க்கலாம். இதே போன்று தான், துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படமும் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Latest Videos

click me!