STR 48 படத்தை கைவிட்ட கமல்; ஆண்டவர் இல்லேனா என்ன? அதகளப்படுத்த சிம்பு போடும் மாஸ்டர் பிளான்

Published : Oct 30, 2024, 01:22 PM IST

சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ள STR 48 படத்தை தயாரிக்க இருந்த கமல்ஹாசன் தற்போது அப்படத்தில் இருந்து திடீரென விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
STR 48 படத்தை கைவிட்ட கமல்; ஆண்டவர் இல்லேனா என்ன? அதகளப்படுத்த சிம்பு போடும் மாஸ்டர் பிளான்
STR 48

கமல்ஹாசன் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். இவர் தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் இன்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் பல்வேறு படங்களை தயாரிக்க முடிவெடுத்த கமல், முதற்கட்டமாக சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தை தயாரிக்க முடிவு செய்தார். அப்படமும் முடிவடைந்து வருகிற தீபாவளி பண்டிகைக்கு உலகம் முழுக்க ரிலீஸ் ஆக உள்ளது.

24
Simbu, Kamal, Desingh Periyasamy

சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிம்புவின் 48வது படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்தார் கமல்ஹாசன். அப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாகவும், வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக தயாராக உள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதையும் டீசர் வெளியிட்டு உறுதிப்படுத்தினர். இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆனபோதிலும் அடுத்தகட்ட அப்டேட்டை வெளியிடாமல் படக்குழு அமைதி காத்து வந்தது.

இதையும் படியுங்கள்... கமல்ஹாசன் vs ரஜினிகாந்த்! தீபாவளி ரேஸில் அதிக ஹிட் கொடுத்தது யார்?

34
STR 48 Movie Update

எஸ்.டி.ஆர் 48 படத்தின் அறிவிப்பு வெளியான பின்னர் 2 படங்களில் நடிக்க கமிட்டாகிவிட்டார் சிம்பு. அதில் ஒரு படமான தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கே முடிவடைந்துவிட்டது. இப்படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்துள்ளார் சிம்பு. அடுத்ததாக சிம்புவின் 49-வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படி சிம்பு நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் அப்டேட் வந்தாலும் எஸ்.டி.ஆர் 48 படத்தின் அப்டேட் மட்டும் இதுவரை வெளியாகவில்லை.

44
STR 48 Producer changed

இந்நிலையில் அப்படம் குறித்த ஒரு முக்கிய தகவல் லீக் ஆகி உள்ளது. அதன்படி எஸ்.டி.ஆர் 48 படத்தில் இருந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியேறி உள்ளது. கமல்ஹாசன் விலகியதால் அவர் இப்படத்திற்காக இதுவரை செலவு செய்த 5 கோடி ரூபாயை நடிகர் சிம்பு திருப்பிக் கொடுத்ததோடு மட்டுமின்றி, எஸ்.டி.ஆர் 48 படத்தை தயாரிக்கும் பொறுப்பையும் கையிலெடுத்துள்ளாராம். அதன்படி எஸ்.டி.ஆர் 48 படத்தை சிம்பு தான் தயாரிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்... கமலின் மெகா ஹிட் படத்திற்கு "நோ" சொன்ன இளையராஜா - கடைசியில் நடந்த எதிர்பாரா ட்விஸ்ட்!

Read more Photos on
click me!

Recommended Stories