தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பிரதான பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. இப்பண்டிகைக்கு புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடுவார்கள். தீபாவளி என்றாலே எப்படி புதுப்படங்கள் தவறாமல் தியேட்டரில் ரிலீஸ் ஆகிறதோ, அதேபோல் டிவியிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் தவறாமல் ஒளிபரப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன என்பதை பார்க்கலாம்.
24
Diwali Special Programs in Sun TV
சன் டிவி
சன் டிவியில் தீபாவளி பண்டிகையன்று, காலை 6 மணிக்கு பெரும்பேர் கண்டிகை முருகன் தரிசனம் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அடுத்ததாக காலை 7 மணிக்கு புனிதா மெகாத்தொடர் பிரபலங்கள் பங்கேற்கும் எங்க வீட்டு தீபாவளி நிகழ்ச்சி வர உள்ளது. காலை 8 மணிக்கு ப்ளடி பெக்கர் படக்குழு பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி. பின்னர் இரவு 9 மணிக்கு தலை தீபாவளி கொண்டாடும் சின்னத்திரை பிரபலங்களை வைத்து சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. காலை 10 மணிக்கு பட்டிமன்றம், 11 மணிக்கு அஜித்தின் விஸ்வாசம் படமும், பிற்பகல் 2 மணிக்கு மெகா தொடர் நாயகிகள் பங்கேற்கும் பட்டாசு பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. பின்னர் மதியம் 3 மணிக்கு விஜய் நடித்த தெறி திரைப்படம், மாலை 6.30 மணிக்கு தனுஷ் நடித்த ராயன், இரவு 10 மணிக்கு காமெடிக்கு நாங்க கேரண்டி ஆகிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தீபாவளி ஸ்பெஷலாக காலை 8 மணிக்கு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா திரைப்படம் காலை 9.30 மணிக்கும், 12.30 மணிக்கு சரிகமப செலிபிரேஷன் நிகழ்ச்சியும், மதியம் 3 மணிக்கு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த அன்னப்பூரணி திரைப்படமும், மாலை 6 மணிக்கு அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடித்த டிமாண்டி காலனி 2 படமும், இரவு 9 மணிக்கு கார்த்திகை தீபம் சீரியல், 9.30 மணிக்கு சந்தியா ராகம், 10 மணிக்கு நினைத்தாலே இனிக்கும் சீரியல் ஆகியவை ஒளிபரப்பாக உள்ளன.
44
Diwali Special Programs in Vijay TV
விஜய் டிவி
தீபாவளி பண்டியன்று விஜய் டிவியில் காலை 8 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. பின்னர் காலை 9.30 மணிக்கு சிவகார்த்திகேயன் பங்கேற்கும் அமரன் தீபாவளி என்கிற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அடுத்ததாக மதியம் 12.30 மணிக்கு ஹனுமன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. பின்னர் மதியம் 2.30 மணிக்கு விஜய் டிவி காமெடி நட்சத்திரங்கள் பங்குபெறும் எங்க ஏரியா உள்ள வராத நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அடுத்ததாக மாலை 4 மணிக்கு தமிழோடு விளையாடு என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. பின்னர் மாலை 5.30 மணிக்கு விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படமும், இரவு பிக்பாஸ் தீபாவளி ஸ்பெஷல் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக இருக்கிறது.