திராவிட மாடலுக்கு சப்போர்ட்; அப்போ விஜய்யை எதிர்க்கிறாரா அஜித்? கொளுத்திப்போட்ட உதயநிதி!

First Published | Oct 30, 2024, 9:58 AM IST

துபாயில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்துகொள்ள உள்ள நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உதயநிதி போட்டுள்ள எக்ஸ் தள பதிவு வைரலாகி வருகிறது.

udhayanidhi Stalin, Ajith, Vijay

நடிகர் அஜித் குமார் கார் ரேஸிங் மீது அதீத ஆர்வம் கொண்டவர். இருப்பினும் அதில் சில விபத்துக்களை எதிர்கொண்டதால் கடந்த சில ஆண்டுகளாக கார் ரேஸிங் பக்கம் செல்லாமல் இருந்த அஜித், தற்போது மீண்டும் தன்னுடைய கார் ரேஸிங் கனவை நோக்கி பயணித்து வருகிறார். அதன்படி துபாயில் நடக்க உள்ள கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய அணியினர் உடன் களமிறங்க உள்ளார். தற்போது அதற்கான பயிற்சியில் அஜித் ஈடுபட்டு உள்ளார்.

Ajithkumar

இந்நிலையில், அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில், உலக அளவில் சிறப்புக்குரிய துபாய் கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோவை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.

Latest Videos


Ajith Car Racing

இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு தமிழக விளையாட்டுத்துறை சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் ஃபார்முலா 4 சென்னை ரேஸிங் ஸ்டிரீட் Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும்.

இதையும் படியுங்கள்... "அண்ணா தந்த ஆயுதம் இது"; மாநாட்டுக்கு பிறகு த.வெ.க தலைவர் விஜய் எழுதிய உருக்கமான கடிதம்!

Ajith Car Race

விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார் உதயநிதி. அவரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், விஜய்யை எதிர்ப்பதற்காக அஜித்தை சப்போர்ட்டுக்கு அழைக்கிறாரா உதயநிதி என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி நன்றி தெரிவித்து போடும் பதிவில் எதற்கு திராவிட மாடல் ஆட்சியெல்லாம் வருகிறது, அஜித்தை அரசியலில் இழுக்க பார்க்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Udhayanidhi X post Rection

அதுமட்டுமின்றி நடிகர் விஜய் அண்மையில் விக்கிரவாண்டியில் நடத்திய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில், ஆளும் கட்சி தான் தன்னுடைய எதிரி என்று ஓப்பனாகவே அறிவித்தார். இந்த நிலையில், அஜித் திராவிட மாடல் ஆட்சியை ஆதரிப்பதாக குறிப்பிட்டு உதயநிதி போட்டுள்ள பதிவைப் பார்த்த நெட்டிசன்கள், அப்போ அஜித் விஜய் கட்சியை எதிர்க்கிறாரா என்கிற கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். உதயநிதியின் இந்த பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... "இப்படி ஒரு விஜயை நான் பார்த்ததே இல்லை" த.வெ.க தலைவரை சரமாரியாக புகழ்ந்த ராதிகா!

click me!