அள்ளிக் கொடுத்த கமல்! அமரனில் நடிக்க SK & சாய் பல்லவி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

First Published | Oct 30, 2024, 8:31 AM IST

தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ள அமரன் படத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி வாங்கிய சம்பளம் பற்றி பார்க்கலாம்.

Sai Pallavi, Sivakarthikeyan

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம் அமரன். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் கெளதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தை இயக்கி இருந்தார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைரக்டராகவும் ராஜ்குமார் பெரியசாமி பணியாற்றி இருக்கிறார். அப்போது கமல்ஹாசன் உடன் கிடைத்த நட்புக்கு பரிசாக கிடைத்தது தான் அமரன் பட வாய்ப்பு.

Amaran

அமரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெளடி பேபி சாய் பல்லவி நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் தான் இசையமைத்து உள்ளார். அமரன் திரைப்படம் அக்டோபர் 31ந் தேதி தீபாவளி பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... துப்பாக்கி கையில் வந்தாச்சு; அப்போ அடுத்து அரசியலா? கோளாறான கேள்விக்கு சிவகார்த்திகேயனின் நச் பதில்!

Tap to resize

Sai Pallavi Salary for Amaran

தீவிரவாதிகள் உடனான மோதலில் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ மேஜரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் அமரன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அமரன் படத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அவர்கள் இருவருக்குமே பெரும் தொகையை சம்பளமாக வாரி வழங்கி இருக்கிறார் கமல்ஹாசன்.

Sivakarthikeyan Salary for Amaran

அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன், அமரன் படத்திற்காக ரூ.30 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம். அவர் கெரியரிலேயே அவர் வாங்கிய அதிக சம்பளம் இதுதான் என கூறப்படுகிறது. இதுதவிர அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவிக்கு ரூ.3 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்னர் வரை ஒரு படத்திற்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வந்த சாய் பல்லவி, அமரன் படத்தில் நடிக்க தான் முதன்முறையாக ரூ.3 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  தீபாவளி ரிலீஸ் படங்களின் ரன்னிங் டைம்!

Latest Videos

click me!