துப்பாக்கி கையில் வந்தாச்சு; அப்போ அடுத்து அரசியலா? கோளாறான கேள்விக்கு சிவகார்த்திகேயனின் நச் பதில்!

First Published | Oct 29, 2024, 11:00 PM IST

Sivakarthikeyan : தளபதி விஜயின் கோட் படத்தில், சிவகார்த்திகேயன் தோன்றிய காட்சிகள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan

தளபதி விஜய் தற்பொழுது முழு நேர அரசியல் தலைவராக பயணிக்க உள்ள நிலையில், இறுதியாக தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரு திரைப்பட பணிகளை முடித்துவிட்டு முழுமையாக கலைத்துறைக்கு ஓய்வு கொடுக்க உள்ளதாக அறிவித்திருந்தார். அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி உலக அளவில் தளபதி விஜயின் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம் வெளியானது. சுமார் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இந்த திரைப்படம் மெகா ஹிட் திரைப்படமாக மாறியது. 

முதல் முறையாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தளபதி விஜய் பணியாற்றி இருக்கிறார். அதேபோல அவரோடு பணியாற்றிய இறுதித் திரைப்படமும் அதுவாக மாறி இருக்கிறது. மேலும் கோட் திரைப்படம் கமர்ஷியல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தது, இந்த திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் தோன்றிய நடிகர் நடிகைகள் தான் என்றால் அது சற்று மிகையல்ல.

ஊரே மெச்சிய திருமணம்; கோடி ரூபாய் சேலையில் மின்னிய முன்னணி நடிகரின் மனைவி; யார் அவர்?

Actor Sivakarthikeyan

அந்த வகையில் தளபதியின் கோட் திரைப்படத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், ஒரு விளையாட்டு அரங்கில் பாம் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அப்பொழுது வில்லன் மோகனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள, ஒரு சரியான ஆளை தளபதி விஜய் தேடிக் கொண்டிருப்பார். அப்பொழுது அங்கே வரும் சிவகார்த்திகேயனிடம், "துப்பாக்கிய புடிங்க சிவா" என்று சொல்லுவார் விஜய்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசும் சிவகார்த்திகேயன்.. "சார் நீங்க வேற ஏதோ முக்கியமான வேலையாக போறீங்க. இனி இதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று பேசிய வசனங்கள் தளபதி விஜய் அரசியலுக்கு செல்வதால், இனி திரை உலகில் "தளபதி" என்று அவருடைய பட்டத்தை சிவகார்த்திகேயன் ஏற்று பயணிக்க உள்ளதாக அவரது ரசிகர்கள் பெரிய அளவில் பேசி வந்தனர். பல பொது இடங்களிலும் சிவகார்த்திகேயனை பாராட்டி அதிலும் குறிப்பாக இந்த வசனத்தை குறிப்பிட்டு பலரும் அவரை பாராட்டிய வருகின்றனர். 

Latest Videos


Goat sivakarthikeyan

நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து, இன்று ஒரு மிகப்பெரிய ஆக்சன் ஹீரோவாக மாறி உள்ள சிவகார்த்திகேயன் தற்பொழுது "அமரன்" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். வருகின்ற தீபாவளி ரிலீஸ் திரைப்படமாக இது வெளியாக உள்ளது. பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், தற்போது அப்படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரமாக அவர் ஈடுபடுத்துகிறார். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை சாய் பல்லவி அவருடைய மனைவியாக நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அமரன் திரைப்பட ப்ரமோஷன் பணியில் ஈடுபட்டிருந்த சிவகார்த்திகேயனிடம், துப்பாக்கி உங்கள் கையில் வந்துவிட்டது, அப்படி என்றால் அடுத்தது அரசியல் தானா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

Amaran

கோவையில் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் குறிப்பிட்ட அந்த கேள்விக்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன் "இல்லை சார் அது திரைப்படத்தில் வந்த ஒரு அழகான காட்சி. ஒரு சீனியர் நடிகர் தனக்கு அடுத்தபடியாக உள்ள நடிகரோடு திரையை பகிர்ந்து கொண்டதே, எனக்கு மிகப் பெரிய சந்தோஷம் அளிக்கும் விஷயம் தான். சினிமாவிலேயே இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அதனால் அரசியல் பற்றி எனக்கு எந்த விதமான எண்ணமும் இல்லை என்று பேசியிருக்கிறார்.

"அண்ணா தந்த ஆயுதம் இது"; மாநாட்டுக்கு பிறகு த.வெ.க தலைவர் விஜய் எழுதிய உருக்கமான கடிதம்!

click me!