நடிகர் ஜூனியர் என்டிஆர், லட்சுமி பிரணதியை கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி திருமணம் செய்துகொண்டார். காதல் திருமணமல்ல, அவரது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான். அதே சமயம், திரையுலகில் நடந்த விலையுயர்ந்த திருமணங்களில் இதுவும் ஒன்றாகும். வெளியான சில தகவல்களின்படி இந்த திருமணத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 100 கோடி ரூபாய். ஆம்! நீங்கள் படித்தது சரி தான். 100 கோடி மதிப்பில் நடந்த ஜூனியர் என்டிஆரின் திருமணத்தைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், அவரது மனைவி லட்சுமி ரூ. 1 கோடி மதிப்பிலான புடவையில் தான் மணமேடை எறியுள்ளார்.