மாரிசெல்வராஜின் அப்பா; அவர் வாழ்க்கையில் நடந்தது என்ன? உருவாகும் புது படம் - ஹீரோ யார் தெரியுமா?

First Published | Oct 29, 2024, 6:08 PM IST

Mari Selvaraj : பிரபல இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அப்படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Mari Selvaraj

தமிழ் சினிமாவில் இதுவரை பிளாப் கொடுக்காத வெகு சில இயக்குனர்களில் ஒருவராக மாறி இருக்கிறார் மாரி செல்வராஜ் என்றால் அது மிகையல்ல. பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான "கற்றது தமிழ்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், துணை இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் களமிறங்கினார் மாரி செல்வராஜ். தொடர்ச்சியாக இயக்குனர் ராமின் திரைப்படங்களில் பணியாற்றி வந்த மாரி செல்வராஜ், கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "பரியேறும் பெருமாள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தன்னுடைய பயணத்தை தமிழ் சினிமாவில் தொடங்கினார்.

தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை படிப்படியாக பல திரைப்படங்களில் கூறி, மக்கள் மனதில் மிகச்சிறந்த இடத்தை ஒரு இயக்குனராக பிடித்து இருக்கிறார் மாரி செல்வராஜ் என்றால் அது மிகையல்ல.

சோக பாடலை அப்படியே குத்து பாட்டாக மாற்றிய இளையராஜா - கமலுக்காக அவர் செய்து மெகா சம்பவம்!

Director Ram

பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நடிகர் தனுஷின் "கர்ணன்" திரைப்படத்தை இயக்கியிருந்தார் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் தமிழக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் தான் பிரபல நடிகர் மற்றும் அரசியல் தலைவர் உதயநிதி ஸ்டாலினை குறித்து "மாமன்னன்" என்கின்ற திரைப்படத்தை வெற்றி திரைப்படமாக மாற்றினார் மாரி செல்வராஜ். மேலும் இந்த திரைப்படத்தின் மூலம், இதுவரை யாரும் பார்த்திராத ஒரு கோணத்தில் வடிவேலுவை நடிக்க வைத்து அசத்தியிருந்தார் மாரி செல்வராஜ்.

Tap to resize

Maamannan

தொடர்ச்சியாக அவருடைய இயக்கத்தில் வெளியான "வாழை" திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் மெகா ஹிட் ஆனது, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை தொடர்ச்சியாக படமாக எடுப்பேன் என்றும் கூறியிருந்தார் மாரி செல்வராஜ். தற்பொழுது பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில், உருவாகி வரும் "பைசன்" என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்கி வரும் நிலையில், அடுத்தபடியாக பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள அவருடைய 28வது திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் மாரி செல்வராஜ். தற்பொழுது இந்த தகவல் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. விரைவில் படம் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என்றும், கடந்த ஆண்டே இந்த திரைப்படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து முடிந்துள்ளதாகவும் அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.

Karthi

மாரி செல்வராஜ் பொறுத்தவரை தன்னுடைய வாழ்க்கை பயணத்தில் நடந்த பல விஷயங்களை தான் திரைப்படமாக எடுத்து வருகிறார். அந்த வகையில் கார்த்தி நடிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தில், மாரி செல்வராஜ், தன் தந்தையின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அந்த திரைப்படத்தை இயக்க உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர், பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சித்ரா லட்சுமணனுடன் நடந்த நேர்காணல் ஒன்றின் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

விஜய் டிவி வில்லியை ஹீரோயினாக களமிறக்கும் சன் டிவி!

Latest Videos

click me!