சோக பாடலை அப்படியே குத்து பாட்டாக மாற்றிய இளையராஜா - கமலுக்காக அவர் செய்து மெகா சம்பவம்!

Ilayaraja and Kamal : உலகநாயகன் கமல்ஹாசனுக்காக பல சிறப்பான பாடல்களை கொடுத்து அசத்தியவர் இசைஞானி இளையராஜா. அந்த வகையில் ஒரு சோகப் பாட்டையே அப்படியே மாற்றி குத்துப் பாட்டாக உருமாற்றி இருக்கிறார்.

Ilayaraja and kamal

தமிழ் திரை உலகில் மிகச்சிறந்த திரைப்படங்களை கொடுத்த நடிகர்களின் பட்டியலில் நிச்சயம் டாப்பில் இருக்கும் நடிகர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். ஒரு நடிகனாக மட்டுமல்லாமல் இந்திய திரை உலகை பொருத்தவரை இயக்குனராக, பாடகராக, தயாரிப்பாளராக, ஒளிப்பதிவாளராக, நடன ஆசிரியராக, இசை அமைப்பாளராக எத்தனையோ கதாபாத்திரங்களை ஏற்று 64 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறந்த கலைஞனாக பயணித்து வருகிறார். அவருடைய பல திரைப்படங்கள் மெகா வெற்றியாக, அந்த படங்களின் கதை ஒரு காரணம் என்றால், அப்படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் இசை மற்றொரு காரணம் என்று கூறினால் அது கொஞ்சம் கூட மிகையல்ல. அந்த அளவிற்கு கமலஹாசனின் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு அசத்தலான இசையை கொடுத்தவர் இளையராஜா.

விஜய் டிவி வில்லியை ஹீரோயினாக களமிறக்கும் சன் டிவி!

Sathya movie

தற்பொழுது உலக நாயகன் கமல்ஹாசன் பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் Thug Life என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எதிர்வரும் 2025ம் ஆண்டு அந்த திரைப்படம் உலக அளவில் வெளியாக இருக்கிறது. ஆனால் சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான "நாயகன்" என்கின்ற திரைப்படத்தில் வேலு நாயக்கராக மணிரத்தினத்தின் திரைப்படத்தில் நடித்து அசத்தியிருப்பார் உலக நாயகன் கமல்ஹாசன். கமலஹாசனின் திரை வாழ்க்கையில் உருவான மிகச் சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இந்த திரைப்படத்தில் கதை எவ்வளவு முக்கிய பங்கு வகித்ததோ, அதே அளவிற்கு இளையராஜாவின் இசையும் அனைவராலும் பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மட்டுமல்ல, படம் முழுக்க ஒலித்த பின்னணி இசையும் வெகுவாக மக்களை பெரிய அளவில் கவர்ந்தது. நாயகன் திரைப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். இதில் "நிலா அது வானத்து மேலே" என்கின்ற பாடலை எழுதி இசையமைத்தது இளையராஜா. மற்ற பாடல்களுக்கு வரிகள் எழுதியது பிரபல பாடலாசிரியர் புலமைப்பித்தன் தான். 


Thenpandi Chemaiyile Song

இந்த திரைப்படத்தில் இளையராஜா மற்றும் கமலஹாசன் ஆகிய இருவரும் இணைந்து பாடிய பாடல் தான் "தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே" என்கின்ற பாடல். இந்த பாடலுக்கான மெட்டை இளையராஜா அமைத்துக் கொண்டிருந்த பொழுது, இதே பாணியில் தனக்கு ஒரு குத்துப் பாடலும் வேண்டும் என்று மணிரத்னம் இளையராஜாவிடம் கேட்டிருக்கிறார். முதலில் இந்த பாடலை முடித்துவிட்டு அதை செய்து தருகிறேன் என்று இளையராஜாவும் கூற, தென்பாண்டி சீமையிலே பாடலுக்கான மெட்டு அமைக்கப்பட்டு இளையராஜா மற்றும் கமலஹாசன் ஆகிய இருவரும் இணைந்து பாடிய அந்த பாடலுக்கு இன்றளவும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. ஆனால் இதே பாடலை அப்படியே மாற்றி ஒரு குத்துப்பாட்டாக அவர் போட்டது தான் நிலா அது வானத்து மேலே என்கின்ற பாடல்.

Nila Athu Vaanathu Mele

உண்மையில் இந்த இரண்டு பாடல்களையும் கொஞ்சம் உற்று கவனித்தால் இந்த இரண்டு பாடல்களுடைய மெட்டும் ஒரே மீட்டரில் தான் இருக்கும். அந்த பாடலை முழுமையாக பாடியது இளையராஜா, மேலும் இந்த திரைப்படத்தை பொறுத்தவரை 1987களில் வழக்கொழிந்து போயிருந்த பல இசை வாத்தியங்களை இந்த திரைப்படத்திற்காக சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார் இளையராஜா. பிரபல நாளிதழ்களில் கூட அந்த காலகட்டத்திலேயே இளையராஜாவின் பின்னணி இசையை பெரிய அளவில் பாராட்டி கட்டுரைகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மதம் மாறியதற்கு பின்னணியில் இப்படி ஒரு கதை இருக்கா!

Latest Videos

click me!