விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில், எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கண்மணி மனோகரன், சன் டிவி சீரியலில் கதாநாயகியாக நடிக்க உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பெங்களூரை சேர்ந்த நடிகை கண்மணி மனோகரன், நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் முதலில் கன்னட சினிமா பக்கம் வாய்ப்பு தேடிய நிலையில், பின்னர் சீரியல் வாய்ப்புகளுக்கு கொக்கி போட துவங்கினார். அந்த வகையில், விஜய் டிவியில் கடந்த 2019 ஆம் ஆண்டு, துவங்கப்பட்ட 'பாரதி கண்ணம்மா' சீரியலில் அஞ்சலி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
25
Kanmani Manoharan New Serial
தரமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி, தன்னுடைய அழகால் ரசிகர்களை கவர்ந்த கண்மணி... 2020-ஆம் ஆண்டு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட 'அமுதாவும் அன்னலட்சுமியும்' தொடரில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகினார்.
கடந்த ஆண்டு 'அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல் முடிவடைந்த நிலையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'மகாநதி' சீரியலில், ஹீரோ விஜய்யின் முன்னாள் காதலி கேரக்டரில் நடித்து வருகிறார். ஆனால் இவர் சுயநினைவை இழந்த பெண்ணாக தற்போது காட்டப்பட்டு வரும் நிலையில், இவரின் வாழ்க்கையில் என்ன நேர்ந்தது, இவரின் இந்த நிலைக்கு யார் காரணம்? என்பது இனிமேல் தான் வெளியாகும் என கூறப்படுகிறது.
45
Sweaty new Serial Announcement
இதுஒருபுரம் இருக்க, தற்போது கண்மணி புதிய சீரியலில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'ராகவி' என்கிற தொடரில் இவர் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த சீரியலில் நீலிமா இசை மற்றும் அருண்குமார் இருவரும் வாணி - ராணி, வானத்தை போல சீரியலை தொடர்ந்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்க உள்ளனர். இதுவரை இந்த சீரியலில் ஹீரோ குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதே போல் சீரியலில் ப்ரோமோ விரைவில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.
நடிகை கண்மணி மனோகரனுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர் அஸ்வந்த்துடன் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. எனவே கண்மணி திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து சீரியலில் நடிக்கும் தகவல் உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.