AR Rahman song
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், 2017 ஆம் ஆண்டு மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் 'காற்று வெளியிடை' இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க, அதிதி ராவ் ஹீரோயினாக நடித்திருந்தார்.
ஏ ஆர் ரஹ்மான், இசையமைத்திருந்த இந்த படத்திற்கு... ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் தமிழில் மட்டுமின்றி, தெலுங்கிலும் 'செழியா' என்கிற பெயரில் வெளியானது.
Kaatru Veliyidai Movie
அதேபோல் இப்படத்தில் இடம்பெற்ற 'வான் வருவான்' பாடல், 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை வென்றது. இப்பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளருக்காக ஏ ஆர் ரகுமானும், சிறந்த பின்னணி பாடகிக்காக சாஷா திருப்பதிக்கும் தேசிய விருது கிடைத்தது.
இந்திய விமான படையில் பணியாற்றும் கார்த்தி, விபத்து ஒன்றில் எதிர்பாராத விதமாக சிக்கும் நிலையில், அவருக்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவர் அதிதி மீது காதல் ஏற்படுகிறது. இருவருக்கும் இடையே வலிமையான காதல் இருந்தாலும், அடுத்தடுத்து ஏற்படும் மோதல்கள் காரணமாக இருவரும் பிரிய நேர்கிறது.
'பாண்டியன் ஸ்டோர் 2' சீரியல்; சம்பள விஷயத்தில் நடிகர்களை மிஞ்சிய நடிகைகள்! முழு விவரம் இதோ!
Maniratnam Movie
கார்த்தி பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார். அங்கிருந்து கார்த்தி தப்பித்த பின்னர் அதிதியை சந்திக்கிறார். இருவரும் மீண்டும் இணைகிறார்களா? இவர்களின் உறவை இணைக்கும் பாலமாக இருக்கக்கூடிய விஷயம் எது? என எதிர்பாராத கிளைமேக்ஸுடன் இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருந்தார்.
இது சாமானிய மக்களுக்கான படம் இல்லை என சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதேபோல் இந்த படத்தில் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்வது பற்றியும், உயர்மட்ட வர்க்கத்தை மையப்படுத்தி கதை அமைந்திருந்ததால்... தமிழக ஆடியன்ஸ் மனதில் இப்படம் இடம்பிடிக்க முடியாமல் போனது. இதுவே இப்படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது.
Tamil cinema latest news
இந்த படத்தில் ஆண் பாடகர் குரலை, பெண் குரலாக மாற்றி.... ஏ.ஆர்.ரகுமான் பயன்படுத்திய விஷயம் உங்களுக்கு தெரியுமா? ஆமாம் இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம் பெற்றிருந்தது, இதில் வைரமுத்து வரிகளில் கேட்கவே கொஞ்சம் வித்தியாசமான பாடலாக இருக்கும் 'டேங்கோ கேளாயோ' என்கிற பாடலில் தான் இந்த மேஜிக்கை ஏ.ஆர்.ரஹ்மான் செய்திருந்தார்.
மோதலில் ஆரம்பித்த காதல்; சன் டிவி சூப்பர் ஹிட் சீரியலில் உருவான புதிய லவ் ஜோடி?
Haricharan Voice
'டாங்கோ கேளாயோ' பாடலை பாடி இருந்தவர் ஹரி சரண். இந்த பாடலை இவர் பாடி முடித்த பின்னர்... பெண் குரலில் பாட வேண்டிய சில வரிகளை, பெண் குரலில் பாட வருபவர்களிடம் போட்டுக்காட்ட, சாம்பிள் வாய்ஸ் நீங்களே பாடுங்கள் என ஏ.ஆர்.ரகுமான் கூற.. ஹரி சரண் அந்த வரிகளை பாடியுள்ளார். பின்னர் பெண் பாடகியை வைத்து பாட வைக்காமல் ஹரி சரண் குரலையே தொழில்நுட்பத்தில் பெண் குரலாக மாற்றி பயன்படுத்தி விட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். படம் தோல்வி அடைந்திருந்தாலும், இப்படத்தில் உள்ள அணைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.