தமிழ் திரையுலகில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். இவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி ஆகிய படங்கள் காலம் கடந்தும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவர் தற்போது நடிகனாக பிசியாக நடித்து வருவதால் படம் இயக்குவதற்கு ரெஸ்ட் விட்டுவிட்டு முழுநேர நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில், தான் தற்கொலைக்கு முயன்றது பற்றி இன்ஸ்டாவில் பேசி இருக்கிறார் செல்வராகவன்.
24
Dhanush, Selvaraghavan
அதில் அவர் கூறியதாவது : “வாழ்க்கையில் உலகம் ஃபுல்லா பார்த்தா கூட, இந்த நிலையை கடக்காத ஆளே இருக்க முடியாது. அதுதான் தற்கொலை மற்றும் மன அழுத்தம். நானே 7 முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். ஆனா அது இப்போ இல்ல நிறைய வருஷத்துக்கு முன்னாடி, ஒவ்வொரு வாட்டியும் உள்ளே ஒரு ஆழமான குரல் ஒன்று கேட்கும். பொறுமையா இரு... பொறுமையா இருனு சொல்லும். நானும் கடவுள் ஏதோ சொல்கிற மாதிரி இருக்குனு விட்ருவேன்.
அதன்பின்னர் 10 நாட்கள் கழித்தோ, 6 மாதங்கள் கழித்தோ அல்லது ஒரு வருஷம் கழித்து கூட வாழ்க்கை டப்புனு மகிழ்ச்சிகரமா, அமைதியா மாறிடும். அப்போ தான் தோணும் அய்யோ நாம் மட்டும் தற்கொலை செய்திருந்தால் இதையெல்லாம் மிஸ் பண்ணிருப்போமே என்று. சொல்லப்போனால் வாழ்க்கையே அதுதான், தற்கொலை செய்பவர்கள் எல்லாம் நினைத்துக் கொள்வது என்ன தெரியுமா... அடுத்த ஜென்மத்திலாவது நிம்மதியாக பிறக்க வேண்டும் என்பது தான்.
44
Director Selvaraghavan
அதுமட்டுமில்லாமல் அடுத்த ஜென்மத்தில் சுவிட்சர்லாந்தில் நிம்மதியா ஒரு காட்டேஜ் நடத்தனும்னு நெனப்பாங்க. ஒருவேளை காட்டில் இருக்கும் விலங்காகவோ, அல்லது வேறு எதுவாகவோ பிறந்தால் என்ன ஆவது. அடுத்த ஜென்மத்துல என்ன நடக்கும்னு யாருக்கு தெரியும். அதேமாதிரி மன அழுத்தத்தில் இருந்தாலும் அதனோடு போய் சண்டை போடக்கூடாது. ஆமாம் என்று இருந்துவிட்டால் அதற்கு தீர்வு கிடைத்துவிடும். தீர்வு கிடைக்காத பிரச்சனையே கிடையாது” என்று அவர் பேசியுள்ள இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் டைரக்டர் இல்ல மோட்டிவேட்டர் என்று பாராட்டி வருகின்றனர்.