'பாண்டியன் ஸ்டோர் 2' சீரியல்; சம்பள விஷயத்தில் நடிகர்களை மிஞ்சிய நடிகைகள்! முழு விவரம் இதோ!

First Published | Oct 29, 2024, 1:05 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர் 2 - தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை' என்கிற சீரியலில் நடித்து வரும், நடிகர் - நடிகைகளின் சம்பளம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
 

Pandian store 2 serial

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர் 2' சீரியல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. ஏற்கனவே ஒளிபரப்பான 'பாண்டியன் ஸ்டார்' சீரியலின் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த சிறப்பான வரவேற்பை தொடர்ந்து தான் 2-ஆம் பாகம் உருவானது. முதல் பாகத்தில் நடித்த சில நடிகர் - நடிகைகள் மட்டுமே இரண்டாம் பாகத்திலும் நடிக்கும் நிலையில், பல புதிய நடிகர்கள் இந்த தொடரில் தற்போது நடித்து வருகிறார்கள்.

Pandian store 2 serial cast

இந்த சீரியல் துவங்கப்பட்டு நாளையுடன் 1 வருடம் ஆக உள்ள நிலையில், இந்த சீரியல், துவங்கப்பட்டபோது சற்று டல் அடித்தாலும், நாளுக்கு நாள்... எதிர்பாராத கதைக்களத்துடன் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.  மேலும் இந்த சீரியலில், ஸ்டாலின் முத்து மற்றும் நிரோஷா முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

மோதலில் ஆரம்பித்த காதல்; சன் டிவி சூப்பர் ஹிட் சீரியலில் உருவான புதிய லவ் ஜோடி?

Latest Videos


Pandian store 2 serial actors salary

இவர்களை தவிர, ராஜ்குமார் மனோகரன், குமரவேல், வெங்கட் ரங்கநாதன், காந்திமதி, அஜய் ரத்னம், ஹேமா ராஜ் குமார், சரண்யா துரடி, ஆகாஷ் பிரேம் குமார், ஷாலினி, விஜே கதிர்வேல், சத்யா சாய், விலாசினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

vijay tv Serial

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் நடிக்கும், நடிகர் - நடிகைகள் பற்றிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர் முதல் பாகத்தை தொடந்து, இரண்டாவது பாகத்திலும் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஸ்டாலின் ஒரு நாளைக்கு 10,000 முதல் 15,000 ஆயிரம் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. இவருக்கு ஜோடியாக கோமதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை நிரோஷா, ஒரு நாளைக்கு 15 முதல் 18 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறார்.

நயன்தாராவுக்கு 40 வயசுனு சொன்னா யார் நம்புவா? 20 வயது யங் லுக்கில் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்!

Serial latest update

அதேபோல் சரவண கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே கதிர்வேல், ஒரு நாளைக்கு ரூ. 7000 சம்பளமாக பெறுகிறார். செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து வரும், வெங்கட் ரங்கநாதன் ஒரு நாளைக்கு 10,000 சம்பளமாக பெறுகிறார். கதிர் கதாபாத்திரத்தில் நடித்தவரும் நடிகர் ஆகாஷ் பிரேம் ஒரு நாளைக்கு ரூ.7000 சம்பளமாகப் பெறுகிறார்.

மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஹேமா ராஜ்குமார் ஒரு நாளைக்கு ரூ.8000 முதல் 10,000 வரை சம்பளமாக பெறுகிறார். ராஜி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஷாலினி ஒரு நாளைக்கு ரூ. 5000 மட்டுமே சம்பளமாக பெருகிறாராம். சக்திவேல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் பாண்டி ரவி, ரூ.8000 சம்பளமாக பெறுகிறார்.

Pandian Store 2 Serial

முத்துவேல் கதாபாத்திரத்தில் நடிக்கும் அஜய் ரத்தம் ஒரு நாளைக்கு ரூ.10,000 சம்பளமாக பெறுகிறார். குமரவேல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சக்தி வேல் ஆதி, ஒரு நாளைக்கு ரூ.5000 சம்பளமாக பெறுகிறார். அதை போல் அரசி கதாபாத் வரும் நடிகை சந்தியாவும் ரூ.5000 சம்பளமாக பெறுகிறார். குழலி கதாபாத்திரத்தில் நடிக்கும் விலாசினி ரூ.6000 பெறுகிறார். இவரை தொடர்ந்து பாண்டியனுக்கு மிகவும் பிடித்த மருமகளாக நடித்து வரும் தங்கமயில் கேரக்டரில் நடிக்கும் சரண்யா துரடி ரூ.10,000 முதல் 12,000 வரை பெறுவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் நடிகர்களை விட, நடிகைகள் தான் சீரியலில் அதிக சம்பளம் வாங்குகின்றனர் என்பது தெரிகிறது.

சகித்துக் கொள்ளவே முடியாத ஒரு இருள்; தந்தை பற்றி இதனால் தான் பேசவில்லை! ஏ.ஆர்.ரஹ்மான் ஓப்பன் டாக்!

click me!