Top 5 Contestants in Bigg Boss Tamil Season 8: ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் ஒரு சூப்பரான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். டான்ஸ், சாங்ஸ், கலை, நடிப்பு என்று எல்லா துறைகளிலிருந்தும் சிறந்து விளங்குபவர்களிலிருந்து ஒரு 18 பேரை தேர்வு செய்து விஜய் டிவி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கிறது. அதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவராக வெளியேற்றி கடைசியில் ஒருவரை தேர்வு செய்து டைட்டில் வின்னராக அறிவிக்கிறது.
அப்படி இதுவரையில் 7 டைட்டில் வின்னர்களை விஜய் டிவி அறிவித்துள்ளது. 8ஆவது வின்னருக்கான போட்டியில் 18 போட்டியாளர்களை பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி அறிமுகம் செய்தது. கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் ரவீந்தர் சந்திரசேகர், அர்ணவ், தர்ஷா குப்தா, தர்ஷிகா, ரஞ்சித், தீபக், விஜே ஆனந்தி, சத்யா, சாச்சனா, பவித்ரா, முத்துக்குமரன், ஜாக்குலின், அருண், அன்ஷிதா என்று 18 போட்டியாளர்கள் இடம் பெற்றனர்.