நடிகர் ராகவா லாரன்ஸ் சினிமாவில் நடன இயக்குனராக பணியாற்றி பின்னர் இயக்குனர், நடிகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவர் இயக்கிய முனி, காஞ்சனா படத்தின் மூன்று பாகங்கள் வேறலெவலில் ஹிட் அடித்தன. அதிலும் கடைசியாக இவர் இயக்கிய காஞ்சனா 3 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. தமிழில் காஞ்சனா படம் ஹிட்டான நிலையில், அப்படத்தை லட்சுமி என்கிற பெயரில் பாலிவுட்டில் இயக்கினார் லாரன்ஸ். ஆனால் அங்கு படுதோல்வியை சந்தித்தது.
24
Raghava Lawrence New Movie
காஞ்சனா 3 படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிறது. அதன்பின்னர் லாரன்ஸ் எந்த படமும் இயக்கவில்லை. அவர் படம் இயக்காததற்கு காரணம் அவர் நடிக்கும் படங்கள் தான். தற்போது ஹீரோவாக கைவசம் அரை டஜன் படங்களுடன் செம்ம பிசியாக நடித்து வருகிறார் லாரன்ஸ். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தற்போது பென்ஸ் படத்தில் நடிக்கிறார் லாரன்ஸ்.
இப்படத்தை ரெமோ படத்தின் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரித்து வருகிறார். இப்படத்தின் கதையும் லோகேஷ் எழுதியது தான். இது எல்.சியு படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர துர்கா, அதிகாரம், காஞ்சனா 4 போன்ற படங்களை லைன் அப்பில் வைத்துள்ள ராகவா லாரன்ஸ், இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
44
Kaala Bhairava Movie
இந்நிலையில், ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் பரிசாக அவர் நடிக்க உள்ள 25வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை அறிவித்துள்ளனர். அதன்படி அப்படத்திற்கு கால பைரவா என பெயரிடப்பட்டு உள்ளது. பான் இந்தியா படமாக உருவாக உள்ள இப்படத்தை ரமேஷ் வர்மா என்கிற தெலுங்கு இயக்குனர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே தெலுங்கில் கில்லாடி, வீரா, ராக்சஷடு போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் ஆவார். இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.