Muthal Mariyathai, Sivaji Ganesan
சினிமா என்றாலே காதல், சண்டை, பாடல் காட்சிகள் இல்லாத படங்களை பார்த்திருக்க முடியாது. இப்போது வரும் படங்களில் எல்லாம் இது தான் டிரெண்ட். சின்ன பட்ஜெட் படம் முதல் பெரிய பட்ஜெட் படம் வரையில் காதல், சண்டை மற்றும் பாடல் காட்சிகள் கொண்டு தான் எடுக்கப்படுகின்றன. ஆனால், சண்டைக் காட்சிகளே இல்லாமல் சைலண்டா திரைக்கு வந்து ஹிட் கொடுத்த டாப் 5 படங்களை பற்றி தான் இந்தப் பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
Nanban Movie
நண்பன்:
விஜய், சத்யராஜ், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் பலர் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் திரைக்கு வந்து ஹிட் கொடுத்த படம் தான் நண்பன். 3 இடியட்ஸ் என்ற ஹிந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்து ஹிட் கொடுத்திருந்தார் இயக்குநர் ஷங்கர். முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சிகள் கூட இல்ல. ஆனால், செண்டிமெண்ட் காட்சிகள், காதல் காட்சிகள், பாடல் காட்சிகள் என்று பிரமிக்க வைத்திருப்பார் இயக்குநர் ஷங்கர்.
தெய்வத்திருமகள்:
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம், அமலா பால், அனுஷ்கா, சந்தானம் ஆகியோர் நடிப்பில் திரைக்கு வந்து ஹிட் கொடுத்த படம் தெய்வத் திருமகள். அப்பா – மகள் கதையை மையப்படுத்திய இந்தப் படம் பட்டிதொட்டியெங்கும் சென்று ஹிட் கொடுத்தது. பாடல் காட்சிகளும் பிரமாதம். இந்தப் படத்தில் விக்ரம் அறிவுசார் ஊனமற்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இந்தப் படத்திற்கு விக்ரமின் நடிப்புத் திறமைக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது.
காக்கா முட்டை:
இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், ஜே விக்னேஷ் மற்றும் வி ரமேஷ் ஆகியோர் பலர் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் காக்கா முட்டை. முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சிகள் கூட இடம் பெறவில்லை. ஆனால், படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்தது.
Naduvula Konjam Pakkatha Kaanom
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்:
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி ஆகியோ நடிப்பில் 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்திய இந்த படத்தில் கிரிக்கெட் விளையாடும் போது விஜய் சேதுபதிக்கு தலையில் அடிபட்டுவிடும். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்திற்கு ஹைலைட்டே. ஆனால், இந்தப் படத்தில் ஒரு ஆக்ஷன் சீக்குவன்ஸ் கூட கிடையாது. எனினும் பாக்ஸ் ஆபிஸில் படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
ட்அபியும் நானும்:
த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ஆகியோர் பலர் நடிப்பில் திரைக்கு வந்த படம் அபியும் நானும். முழுக்க முழுக்க அப்பா மகள் உறவு கதையை மையப்படுத்திய இந்தப் படம் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்ற கருத்தை எடுத்துரைத்தது. அன்பு என்ற ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்தது.
இந்தப் படங்கள் தவிர திருச்சிற்றம்பலம், ஓ மை கடவுளே, காற்றின் மொழி, கல்யாண சமையல் சாதம், மொழி, அழகிய தீயே, புதுவசந்தம், முதல் மரியாதை, மௌன ராகம், ஒருதலை ராகம், குங்குமச்சிமிழ், நான்பாடும் பாடல், உன்னைநான் சந்தித்தேன், தென்றலே என்னை தொடு, சம்சாரம் அது மின்சாரம் என்று எத்தனையோ படங்கள் சண்டைக் காட்சிகள் இல்லாமல் திரைக்கு வந்து ஹிட் கொடுத்துள்ளன.