புகழ்பெற்ற டப்பிங் கலைஞரான ஸ்ரீஜா ரவியின் மகள் தான் ரவீனா ரவி. சென்னையில் எத்திராஜ் கல்லூரியில் படித்த இவர், தன் தாயைப் போலவே நல்ல குரல் வளத்துடன் இருந்ததால், சினிமாவில் டப்பிங் கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன்படி சமுத்திரக்கனி இயக்கிய சாட்டை படம் மூலம் டப்பிங் ஆர்டிஸ்டாக அறிமுகம் ஆனார் ரவீனா. அந்த படத்தில் நடிகை மஹிமா நம்பியாருக்கு டப்பிங் பேசியது ரவீனா தான். இதையடுத்து நிமிர்ந்து நில் படத்தில் அமலா பால், ஜீவா படத்தில் ஸ்ரீ திவ்யா, கத்தி படத்தில் சமந்தா ஆகியோருக்கு டப்பிங் பேசியனார் ரவீனா.
24
Raveena Ravi
அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த படம் என்றால் அது ஷங்கரின் ஐ படம் தான். அப்படத்தில் நடிகை எமி ஜாக்சனுக்கு ரவீனா தான் குரல் கொடுத்து இருந்தார். குறிப்பாக சென்னை பாசையில் அவர் பேசும் டயலாக் வேறலெவலில் ரீச் ஆனது. அப்படத்துக்கு பின்னர் ஐஸ்வர்யா ராஜேஷ், காஜல் அகர்வால், தீபிகா படுகோனே போன்ற முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசினார் ரவீனா. இப்படி டப்பிங் ஆர்டிஸ்டாக கோலோச்சி வந்த அவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.
பின்னர் காவல்துறை உங்கள் நண்பன், ராக்கி, வீரமே வாகை சூடும், மாமன்னன் போன்ற படங்களில் நடித்த ரவீனாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இப்படத்தில் நடிகர் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரவீனா. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் ரவீனாவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. அவர் தமிழ் மட்டுமின்றி மலையாள மொழியில் நடித்து வருகிறார்.
44
Raveena Ravi Lover Devan Jayakumar
அந்த வகையில் மலையாளத்தில் உருவான வாலாட்டி என்கிற திரைப்படத்தில் நடித்தபோது அவருக்கு அப்படத்தின் இயக்குனர் தேவன் ஜெயக்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இந்த நிலையில், தான் தேவன் ஜெயக்குமாரை காதலிக்கும் விஷயத்தை முதன்முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார் ரவீனா. அதில் இருவரும் ஜோடியாக கட்டிப்பிடித்து போஸ் கொடுத்துள்ளனர். இந்த காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.