கோலிவுட்டில் அடுத்த தளபதியாக உருவெடுத்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது அமரன் படம் தயாராகி உள்ளது. இப்படத்தை பிக்பாஸ் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் முதன்முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் சாய் பல்லவி. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீஸ் ஆக உள்ளது.
24
Amaran
இதுதவிர சிவகார்த்திகேயன் கைவசம் மேலும் மூன்று படங்கள் உள்ளன. அதில் ஒரு படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். எஸ்.கே.23 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதையடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம், சுதா கொங்கரா இயக்கத்தில் ஒருபடமும் லைன் அப்பில் உள்ளது.
இதில் சிபி சக்கரவர்த்தி மற்றும் சுதா கொங்கரா ஆகியோரின் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளாராம் எஸ்.கே. சுதா கொங்கரா இயக்கும் படத்திற்கு புறநானூறு என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் முதலில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்க இருந்தார். ஆனால் பின்னர் கதையில் திருப்தி இல்லாமல் அவர் விலகியதால் அவருக்கு பதில் எஸ்.கே.வை வைத்து புறநானூறு படத்தை இயக்க உள்ளார் சுதா கொங்கரா. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
44
Sivakarthikeyan Next Movie Title
இதேபோல் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ள படத்தின் படப்பிடிப்பும் டிசம்பர் மாதம் தான் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது சிவகார்த்திகேயனின் 24-வது படமாகும். டான் படத்தை போல் இந்த படத்துக்கும் மாஸான டைட்டில் உடன் களமிறங்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதன்படி சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் எஸ்.கே ஹீரோவாக நடிக்க உள்ள புதிய படத்திற்கு பாஸ் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.