ரஞ்சனி சீரியல் வருகிற நவம்பர் 4ந் தேதி முதல் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவி இந்த புது சீரியலை களமிறக்கி உள்ளது. இதற்கு முன்னர் 9.30 மணி ஸ்லாட்டில் ஒளிபரப்பான எதிர்நீச்சல், மல்லி போன்ற தொடர்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால் ரஞ்சனி சீரியலும் அதே போல் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.