இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் ஒரு வழியாக தற்போது துவங்கியுள்ள நிலையில், இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் நடிப்பில், கடைசியாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்த 'துணிவு' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆக உள்ள நிலையில், தற்போது வரை அஜித்தின் அடுத்த படமான 'விடாமுயற்சி' படத்தின் அப்டேட்ஸ் வெளியாகாமல் இருந்ததால், ரசிகர்கள் தொடர்ந்து இப்படத்தில் அப்டேட் எப்போது வெளியாகும் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இன்று மாலை 6:30 மணி அளவில் விடாமுயற்சி திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.