கூடுதலாக, 9Skin நிறுவனம் “Skinderella” Hydrogel Mask என்கிற பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது. இது Tira மூலம் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைத் தாண்டி, மலேசியா, சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்து, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் TIRA இணையதளம் மூலம் 9ஸ்கின் பொருட்களை வாங்க முடியும்.
நயன்தாரா டிராவுடன் இணைவது குறித்து கூறுகையில்... “டிராவுடன் கூட்டு சேர்ந்து இந்திய சந்தையில் எங்கள் வரம்பை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அனைத்து வகையான தோல் வகைகளுக்கும் சுத்தமான, பயனுள்ள மற்றும் நெறிமுறைகளோடு தோல் பராமரிப்பு தீர்வுகளை வழங்குவதே எங்கள் நோக்கம், டிரா மூலம் அதிகப்படியான மக்களை எங்களின் பொருள் கவரும் என பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.