காரை அந்த நபர் பார்க் செய்துவிட்டு சென்றதும், ஜீப் காம்பஸ் காரில் வந்த இரண்டு நபர்கள், அடித்தளத்திற்குள் நுழைவதை கேமரா பதிவில் காணமுடிந்துள்ளது. அதன் பிறகு மேம்பட்ட ஹேக்கிங் நுட்பங்களைப் பயன்படுத்தி அதிகாலை 2 மணியளவில் அந்த காரை அவர்கள் களவாடி சென்றுள்ளனர். போலீசார் அறிக்கையின்படி, கொள்ளையர்கள் காரை கள்ளத்தனமாக திறந்து, பின்னர் ஒரு சந்தேக நபர் கானின் காரை வெளியே ஓட்டி சென்றுள்ளார். அதிகாலை 4 மணியளவில் உணவகம் மூடப்பட்டபோது, கான் "வாலட்டை" (ஹோட்டலில் உள்ள கார் ஓட்டும் நபர்) தனது காரைக் கொண்டுவருமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு கார் ஓட்டும் நபரிடம் இருந்து கிடைத்த பதில், காரை காணவில்லை என்பது தான்.