கண்கலங்கி நின்ற குரூப் டான்சர்கள்; பாண்டியராஜன் செய்த நெகிழ்ச்சி சம்பவம் - எந்த படத்தில் தெரியுமா?

First Published Oct 28, 2024, 4:51 PM IST

Actor Pandiarajan : தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இயக்குனராகவும், அதிலும் சிறந்த நடிகராகவும் கடந்த 1981ம் ஆண்டு முதல் பயணித்து வருபவர் தான் பாண்டியராஜன்.

Pandiarajan

தமிழ் திரை உலகில் பல முக்கிய இயக்குனர்களை அறிமுகம் செய்த பெருமைக்கு உரியவர் தான் பாக்யராஜ். அந்த வகையில் அவரிடம் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றி, அதன் பிறகு இயக்குனராகம், நடிகராகவும் தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் தான் பாண்டியராஜன். கடந்த 1981ம் ஆண்டு இயக்குனர் பாக்யராஜின் இயக்கத்தில் வெளியான "அந்த ஏழு நாட்கள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான் பாண்டியராஜன்.

தொடர்ச்சியாக பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான "தூரல் நின்னு போச்சு" மற்றும் "டார்லிங் டார்லிங் டார்லிங்" போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று அவர் நடித்து வந்தார். இந்த சூழலில் தான் கடந்த 1985 ஆம் ஆண்டு பிரபல நடிகர் பிரபு மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான "கன்னி ராசி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கினார்.

தலைவர் மாடுலேஷனில் மாநாட்டை தெறிக்க விட்ட தளபதி! விஜய்க்கு இருந்த தைரியம் ஏன் ரஜினிக்கு இல்லை?

actor pandiarajan

1985 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை சுமார் 9 திரைப்படங்களை பாண்டியராஜன் இயக்கியிருக்கிறார். இதில் கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான "நெத்தியடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் பாண்டியராஜன் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. "கோபாலா கோபாலா", "டபுள்ஸ்" மற்றும் "கபடி கபடி" போன்ற நல்ல பல காமெடி திரைப்படங்களை இயக்கிய பாண்டியராஜன், இறுதியாக கடந்த 2006 ஆம் ஆண்டு அவருடைய மகன் பிரித்திவிராஜ் நடிப்பில் வெளியான "கைவந்த கலை" என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அது தான் அவர் இயக்கிய கடைசி படமாக இதுவரை இருந்து வருகின்றது. அதேபோல அவருடைய மகனுக்கு அதுதான் முதல் திரைப்படம். அண்மையில் வெளியான ஸ்டார் திரைப்படம் பிரித்திவிராஜனுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

Latest Videos


Director Pandiarajan

சினிமா மட்டும் அல்லாமல் சின்னத்திரை நாடகங்களிலும் அவர் நடித்து வந்தார். திரை உலகிற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்த பாண்டியராஜன் தன்னுடன் திரைப்படங்களில் பணியாற்றும் பணியாளர்களை பெரிய அளவில் கௌரவிப்பதில் ஆர்வம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. அப்படி ஒரு சம்பவமும் அவருடைய இயக்கத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் நடந்திருக்கிறது. கடந்த 1985 ஆம் ஆண்டு அவருடைய இயக்கத்தில் வெளியான கன்னி ராசி திரைப்படத்தை தொடர்ந்து, அதே ஆண்டு பாண்டியராஜன் நடித்து இயக்கி வெளியிட்ட திரைப்படம் தான் "ஆண் பாவம்". இன்றளவும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. பாண்டியராஜனின் டைமிங் காமெடி பலராலும் பெரிய அளவில் பாராட்டப்பட்ட படங்களில் ஆண்பாவம் திரைப்படமும் ஒன்று. 

Rajinikanth

குறிப்பாக இந்த திரைப்படத்தில் ஒலிக்கும் "காதல் கசக்குதையா" என்ற பாடல் ஆண்டுகள் பல கடந்தும் இன்றளவும் பலரால் ரசிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவின்போது இந்த ஆண்பாவம் திரைப்படத்தில் வரும் காதல் கசக்குதய்யா என்ற பாடலில், தன்னுடன் இணைந்து நடனமாடிய குரூப் டான்சர் அனைவரையும் பெயர் சொல்லி ஒருவர் பின் ஒருவராக மேடைக்கு அழைத்து, அவர்களுக்கு பரிசுகளும் கேடயமும் அளித்து கௌரவ படுத்தியிருக்கிறார் பாண்டியராஜன். 

ஆனால் இந்த விஷயம் குறித்து தெரியாமல் திடீரென மேடைக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட அந்த குரூப் டான்ஸர்கள் அன்று கண்ணீர் மல்க பாண்டியராஜனுக்கு நன்றி கூறினார்களாம். இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் ஹிட்டாகும் பொழுது படக்குழுவினர்களுக்கு பரிசுகள் வழங்கும் வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அந்த விஷயத்தை செய்து காட்டி அசத்தியிருக்கிறார் பாண்டியராஜன். 

நடிகர் விஜய்யை விட படு பிரம்மாண்டமாக திருமண மண்டபம் கட்டிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை!!

click me!