நடிகர் விஜய்யை விட படு பிரம்மாண்டமாக திருமண மண்டபம் கட்டிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை!!

First Published | Oct 28, 2024, 2:33 PM IST

சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் நடித்த நடிகை ஒருவர் பிரம்மாண்டமாக திருமண மண்டபத்தை கட்டி அதற்கு கிரஹப்பிரவேசம் நடத்தி உள்ளார்.

Sathya Devarajan New Marriage Hall

சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து சம்பாதிக்கும் நடிகர், நடிகைகள் அதை தொழிலில் முதலீடு செய்து நன்கு லாபம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் திருமண மண்டபம் கட்டி அதன் மூலம் சம்பாதிக்கு நடிகர், நடிகைகள் வெகுசிலரே. அதன்படி நடிகர் விஜய்க்கு சொந்தமாக சென்னையின் பல்வேறு இடங்களில் திருமண மண்டபங்கள் உள்ளன. அதற்கு லட்சக்கணக்கில் வாடகை வாங்கி வருகிறார் தளபதி. அந்த வரிசையில் தற்போது விஜய் பாணியில் எதிர்நீச்சல் சீரியல் நடிகையும் திருமண மண்டபம் ஒன்றை சொந்தமாக கட்டி இருக்கிறார்.

Sathya Devarajan

சன் டிவியில் சக்கைப்போடு போட்ட சீரியல்களில் எதிர்நீச்சல் சீரியலும் ஒன்று. அந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி இருந்தார். கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் கடந்த ஆண்டு முழுக்க டிஆர்பியில் நம்பர் 1 இடத்தில் இருந்தது.

Tap to resize

Sathya Devarajan Husband

அதற்கு காரணம் இந்த சீரியலின் விறுவிறுப்பான கதைக்களமும், அதில் நடித்த நடிகர்களும் தான். இந்த சீரியலில் பரபரப்பாக பேசப்பட்டது ஆதிரை - கரிகாலன் திருமணம் தான். இதில் விருப்பமே இல்லாத ஆதிரையை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து கரிகாலனுக்கு ஆதிகுணசேகரன் திருமணம் செய்து வைத்த எபிசோடை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

இதையும் படியுங்கள்... திடீரென சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட சன் டிவி... சட்டென புது பிசினஸ் தொடங்கிய எதிர்நீச்சல் சீரியல் நாயகி

Sathya Devarajan Marriage hall

அப்படி எதிர்நீச்சல் சீரியலில் பரபரப்பாக பேசப்பட்ட ஆதிரை கேரக்டரில் நடித்தவர் தான் சத்யா தேவராஜன். இவர்தான் தற்போது சொந்தமாக பிசினஸ் தொடங்கி இருக்கிறார். எதிர்நீச்சல் தொடர் முடிவடைந்ததை அடுத்து ஒரு பிரம்மாண்ட கல்யாண மண்டபத்தை கட்டி அதற்கு கிரஹப்பிரவேசமும் நடத்தி உள்ளார் சத்யா.

Sathya Devarajan Marriage Hall Opening

அப்போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சத்யா, எனது குடும்பத்தின் உதவியால் என் காதல் கணவருடன் சேர்ந்து எங்கள் கனவை நனவாக்கி உள்ளோம். வெங்கடாசலபதி பேலஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த திருமண மண்டபத்துக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார் சத்யா.

Sathya Devarajan New Marriage Hall

விஜய்யின் திருமண மண்டபத்தை விட படு பிரம்மாண்டமாக கட்டியிருக்கிறார் சத்யா. அவரின் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் விரைவில் தொடங்க உள்ள எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Ethirneechal: எதிர்நீச்சல் முடிவுக்கு சன் டிவி போட்ட இந்த கண்டிஷன் தான் காரணம்? உண்மையை உடைத்த அப்பத்தா!

Latest Videos

click me!