'அண்ணா' சீரியல் நடிகருக்கு 'லப்பர் பந்து' பட நடிகையுடன் நடந்த நிச்சயதார்த்தம்! குவியும் வாழ்த்து!

Published : Oct 28, 2024, 01:49 PM ISTUpdated : Oct 28, 2024, 01:57 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் நடித்து பிரபலமானவர், சந்தோஷ். இவருக்கும் நடிகை மௌனிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.  

PREV
16
'அண்ணா' சீரியல் நடிகருக்கு 'லப்பர் பந்து' பட நடிகையுடன் நடந்த நிச்சயதார்த்தம்!  குவியும் வாழ்த்து!
Santhosh And Mounica Engagement

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கன்னத்தில் முத்தமிட்டால்' சீரியலின் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் சந்தோஷ், இவருக்கும் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'லப்பர் பந்து' படத்தில் குணசித்ர வேடத்தில் நடித்த நடிகை மௌனிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், இவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

26
zee tamil Serial Actor

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான,  'கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலை  செந்தில்குமார் என்பவர் இயக்க, மனிஷாஜித்  மற்றும் திவ்யா பத்மினி... ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, சந்தோஷ் நாயகனாக நடித்திருந்தார்.

இந்த அடிப்படை நாகரீகம் கூட தெரியாத விஜய்; TVK மாநாட்டில் இந்த விஷயங்களை கவனிசீங்களா?

36
Lubber Panthu Movie Actress

குடும்ப பின்னணியை கொண்ட, காதல் தொடராக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் ஹிந்தியில் ஒளிபரப்பான 'துஜ்சே ஹை ராப்தா' என்ற தொடரின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாகும்.

46
Kanakaanum Kalangal Web Series Actress

அதே போல் 'புதிய பார்வை' என்கிற குறும்படத்திலும், வித்தியாசமான கெட்டப்பில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார். 'அண்ணா' சீரியலிலும் நடித்து வந்த இவர் சமீபத்தில் இந்த தொடரில் இருந்து விலகினார். 
தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் சந்தோஷ், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சன் டிவியில் இருந்து விலகி.. ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவிய சீரியல் ஹீரோயின்!

56
Celebrities Engagement

இந்நிலையில் இவர் பிளாக் ஷீப் வீடியோஸ், கனா காணும் காலங்கள் போன்றவற்றில் நடித்து பிரபலமான நடிகை மௌனிகாவை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். மௌனிகா சமீபத்தில் வெள்ளித்திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற, 'லப்பர் பந்து' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

66
Engagement Photos

சந்தோஷ் - மௌனிகா காதலுக்கு இருவீட்டு தரப்பிலும் பச்சைக்கொடு காட்டிய நிலையில், இவர்களின் திருமண நிச்சயதார்த்தம், நேற்று மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து ரசிகர்களும் இந்த கியூட் நட்சத்திர ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

'Mr மனைவி' சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நடிகை! இனி இவருக்கு பதில் இவர்தான்!

Read more Photos on
click me!

Recommended Stories