திலீப் குமார் என்கிற இயற்பெயருடன் பிறந்து, இசை மீதான ஆர்வத்தால்... சிறு வயதில் இருந்தே இசை பயிற்சி எடுத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான், ஒரு கட்டத்தில் விளம்பரப்படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு வளர்ந்தார். பின்னர், இயக்குனர் மணிரத்தினம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மீதும், அவர் மீதும் உள்ள நம்பிக்கை காரணமாக, 'ரோஜா' திரைப்படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை கொடுத்தார்.
இசையமைப்பாளராக அறிமுகமான தன்னுடைய முதல் படத்திலேயே... இனிமையான இசையால் ரசிகர்கள் மனதை உருகச் செய்தார் ஏ ஆர் ரஹ்மான். மேலும், எத்தனையோ புதிய இசையமைப்பாளர்கள் வந்த போதும் இளையராஜாவின் இசையை அசைத்துப் பார்க்க முடியாத நிலையில், ஏ ஆர் ரகுமானின் இசைக்கு பாராட்டுக்கள் குவிந்தன.