இந்த சூழலில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "தாய் மூகாம்பிகை". இந்த திரைப்படத்தில் அம்மனாக கே.ஆர் விஜயா நடித்து அசத்தியிருப்பார். அது மட்டுமல்ல இசை ஞானி இளையராஜாவின் அற்புதமான இசையில் இந்த திரைப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் ஒலித்தது. 1980களின் தொடக்கத்தில் மிகச் சிறந்த இயக்குனராக வலம் வந்த சங்கரின் இயக்கத்தில் சிவப்பிரசாத் என்பவருடைய தயாரிப்பில் கார்த்திக், சிவகுமார், கே.ஆர் விஜயா, ஜெய்சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் எம்.என் நம்பியார் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படத்தில் ஒலித்தது தான் "ஜனனி ஜனனி, ஜகம் நீ அகம் நீ" என்கின்ற பாடல். உண்மையில் இந்த பாடலை கேட்டு கண் கலங்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவ்வளவு நேர்த்தியாக அமைந்திருக்கும் இந்த பாடல். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள், இளையராஜாவின் இசையும் அவருடைய குரலும் தான் என்றால் அது சற்றும் மிகையல்ல.