ஒரு படத்துக்கு 300 கோடி! சம்பள விஷயத்தில் விஜய்யை ஓவர்டேக் செய்த அந்த நடிகர் யார் தெரியுமா?

Published : Oct 29, 2024, 09:34 AM ISTUpdated : Oct 29, 2024, 12:19 PM IST

இந்திய சினிமா வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருந்து வந்த நிலையில், தற்போது அவரை பிரபல நடிகர் பின்னுக்கு தள்ளி உள்ளார்.

PREV
15
ஒரு படத்துக்கு 300 கோடி! சம்பள விஷயத்தில் விஜய்யை ஓவர்டேக் செய்த அந்த நடிகர் யார் தெரியுமா?
Thalapathy Vijay

கொரோனா காலகட்டத்துக்கு பின்னர் நடிகர்கள் தங்கள் சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், ரஜினி, கமல் ஆகியோர் மளமளவென சம்பளத்தை ஏத்தி 100 கோடிக்கு மேல் வாங்கி வந்தனர். பின்னர் படத்துக்கு படம் மவுசு அதிகரித்ததால் அதற்கேற்ப நடிகர்களின் சம்பளமும் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக பான் இந்தியா படங்களில் நடிக்கும் தெலுங்கு நடிகர்களை விட தமிழ் ஹீரோஸ் அதிக சம்பளம் வாங்கினர்.

25
vijay Salary

அதிலும் குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்துக்காக ரூ.200 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். அவரை மிஞ்சும் வகையில் நடிகர் விஜய் கோட் படத்திற்காக ரூ. 250 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். பின்னர் ஒருபடி மேலே போய் தன்னுடைய கடைசி படமான தளபதி 69-ல் நடிக்க நடிகர் விஜய் உச்சபட்ச சம்பளத்தை வாங்கி இருக்கிறார். அவருக்கு அப்படத்திற்காக ரூ.275 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகராக உருவெடுத்தார் விஜய்.

இதையும் படியுங்கள்... தலைவர் மாடுலேஷனில் மாநாட்டை தெறிக்க விட்ட தளபதி! விஜய்க்கு இருந்த தைரியம் ஏன் ரஜினிக்கு இல்லை?

35
Allu Arjun

பாலிவுட் நடிகர்களையே சம்பள விஷயத்தில் ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய், அப்படத்தோடு சினிமாவை விட்டு விலக உள்ளார் என்பது அனைவருக்குமே பேரதிர்ச்சியாக உள்ளது. தளபதி 69 படத்தில் நடித்து முடித்ததும் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார் விஜய். இப்படி சினிமாவை விட்டு விலகும் போது அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்கிற பெருமையோடு விஜய் விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரைவிட அதிக சம்பளம் வாங்கி அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஒரு மாஸ் ஹீரோ.

45
Pushpa Movie Allu Arjun

அவர் வேறுயாருமில்லை, புஷ்பா என்கிற படம் மூலம் பான் இந்தியா ஹீரோவாக உருவெடுத்த அல்லு அர்ஜுன் தான். அவர் நடிப்பில் தற்போது புஷ்பா 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சுகுமார் இயக்குகிறார். இப்படத்தில் நடிக்க தான் நடிகர் அல்லு அர்ஜுன் அதிக சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. புஷ்பா 2 படத்துக்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ரூ.300 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.

55
Allu Arju salary for Pushpa 2

புஷ்பா 2 திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 6-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்திய சினிமாவில் அதிக எதிர்பார்க்கப்படும் படமாக புஷ்பா 2 உள்ளதால் அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி ரிலீசுக்கு முன்னரே புஷ்பா 2 திரைப்படம் ரூ.900 கோடி வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்திய சினிமாவில் அடுத்த ஆயிரம் கோடி வசூலிக்கும் படமாக புஷ்பா 2 இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... "இப்படி ஒரு விஜயை நான் பார்த்ததே இல்லை" த.வெ.க தலைவரை சரமாரியாக புகழ்ந்த ராதிகா!

Read more Photos on
click me!

Recommended Stories