- Home
- Gallery
- Benz : ஆரம்பமே அளப்பறையா.. லோகேஷ் தயாரிக்கும் ராகவாவின் "Benz" - படத்தில் இணைந்த 2 தெறி மாஸ் நடிகர்கள்!
Benz : ஆரம்பமே அளப்பறையா.. லோகேஷ் தயாரிக்கும் ராகவாவின் "Benz" - படத்தில் இணைந்த 2 தெறி மாஸ் நடிகர்கள்!
Raghava Lawrence : ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு தனது அடுத்த பட பணிகளை துவங்கியுள்ளார் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ்.

Kannan
பிரபல இயக்குனர் அட்லீயின் "ராஜா ராணி" திரைப்படத்தில், உதவி இயக்குனராக பணியாற்றி தனது கலை பயணத்தை தொடங்கிய இயக்குனர் பாக்யராஜ் கண்ணன். கடந்த 2016ம் ஆண்டு சிவக்கார்த்திகேயன் நடிப்பில் வெளியான "ரெமோ" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
lokesh kanagaraj
அதன் பிறகு கார்த்தியின் "சுல்தான்" திரைப்படத்தை இயக்கியிருந்த பாக்யராஜ் கண்ணன், தற்பொழுது பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் "பென்ஸ்" என்கின்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.
Fahadh
இந்த நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், பிரபல மலையாள திரையுலக நடிகர் பாஹத் பாசில், "பென்ஸ்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.
SJ Suryah
அதேபோல ஏற்கனவே ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்" திரைப்படத்தில் அசத்திய மூத்த தமிழ்த் திரையுலக இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே சூர்யா அவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.