Published : Oct 29, 2024, 11:33 AM ISTUpdated : Oct 29, 2024, 11:52 AM IST
சன் டிவியில் சில மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்டு, அணைத்து தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும், சீரியலில் நடித்து வரும் ஹீரோ - ஹீரோயின்ஸ் தற்போது நிஜமாகவே காதலித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'மூன்று முடிச்சு '. இந்த சீரியலில் ஹீரோவாக நியாஸ் கான் நடிக்க, ஹீரோயினாக ஸ்வாதி கொண்டே நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரீத்தி சஞ்சீவ், பிரபாகரன், தர்ஷனா ஸ்ரீபால், மீனா வேம்புரி, கீர்த்திகா லட்டு, கீதா ரவிசங்கர், சிங்கப்பூர் தீபன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
26
Moondru Mudichu Serial update
இந்த சீரியல் துவங்கிய சில வாரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று TRP ரேட்டிங்கில், டாப் 3 பட்டிலுக்குள் இடம்பிடித்தது. தற்போது இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் நியாஸ் கான் மற்றும் ஸ்வாதி கொண்டே தான் உண்மையிலேயே காதலித்து வருவதாக, சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
இந்த சீரியல் துவங்கியதில் இருந்தே, இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் வெடித்ததாகவும், பின்னர் அதுவே காதல் வர காரணமாக மாறியதாக கூறப்படுகிறது. ஆனால் இப்படி வெளியாகும் தகவல் வதந்தியா? உண்மையா என்பது பற்றி இதுவரை நியாஸ் மற்றும் ஸ்வாதி கொண்டே தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை.
46
Eeramana Rojave 2 serial Fame Swathi Konde
'மூன்று முடிச்சு' தொடரில் நடித்து வரும், 'ஸ்வாதி கொண்டே' விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பான 'ஈரமான ரோஜாவே 2' தொடரில், திரவியத்துக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். இதை தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார். குறிப்பாக சமீபத்தில் வெளியான 'மெய்யழகன்' படத்தில், அரவிந்த் சாமிக்கு தங்கையாக நடித்திருந்தார். அதே போல், கார்த்தியின் முறை பெண்ணாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சரியான பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால்... விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய ஸ்வாதி கொண்டே, தற்போது 'மூன்று முடிச்சு' தொடரில் தனித்துவமான கதாநாயகி ரோலில் நடித்து வருகிறார். கிராமத்து பெண்ணான நாந்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்வாதியை, தன்னுடைய அம்மாவை பழி வாங்க வேண்டும் என்பதற்காக, EX மினிஸ்டர் பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்ட போதும், நந்தினி கழுத்தில் தாலி கட்டி அவரையே தன் மனைவியாக மாற்றுகிறார். முழு நேர குடிகாரனாக இருக்கும் சூர்யா (நியாஸ்)-சை எப்படி நந்தினி திருத்த போகிறார். என்பதே இந்த தொடரின் கதைக்களம் என தெரிகிறது.
66
Puthuputhu Arthangal Serial Hero Niyaz Khan
விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் நடித்து வரும் நியாஸ், இதற்க்கு முன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் சீரியலில், தேவயானியின் மகனாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நியாஸ் - ஸ்வாதி கொண்டே காதலிப்பதாக கூறப்படும் நிலையில், இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.