துல்கர் சல்மான் தனக்கு கார் மீது உள்ள ஆசை, மற்றும் தன்னுடைய கார் கலெக்ஷன் பற்றியும் மனைவி அமல் சுஃபியாவை பள்ளியில் சந்தித்தது குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான, துல்கர் சல்மான் வாரிசு நடிகர் என்கிற அடையாளத்துடன் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், மிக குறுகிய வருடத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து முன்னணி நடிகராக மாறினார் . தற்போது இவர் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக வர உள்ள நிலையில், பேட்டி ஒன்றில் இவர் கூறிய தகவல்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
26
Aha unstoppable with nbk 4
துல்கர் சல்மான் சமீபத்தில், NBK சீசன் 4 அன்ஸ்டாப்பபிள் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டு, தனது வாழ்க்கை, உறவு, வேலை மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து எழுபட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். எனவே இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
துல்கர் சல்மான் அவருக்கு கார்கள் மீதுள்ள ஆர்வத்தைப் பற்றி பேசும்போது, கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும் , கார்களில் அமர்ந்து சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என கார்கள் மீதான காதலை வெளிப்படுத்தினார். அதே போல் அதிக பச்சமாக , 300 கிலோமீட்டர் வேகத்தில் இதுவரை பயணித்துள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
46
Dulquer Salman
பல ஆடம்பர கார்களை வாங்கி வைத்துள்ள துல்கரின் கலெக்ஷனில் போர்ஷே, ஃபெராரி, மெர்சிடிஸ்,BMW, ரோல்ஸ் ராய்ஸ் ஆகியவை அடங்கும். அயல்நாட்டு மற்றும் விண்டேஜ் கார்கள் மீது அதிக விருப்பம் என்பதையும் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து, துல்கர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுகையில், ஏறக்குறைய 13 வருடங்கள் மனைவி அமல் சுஃபியா-வுடன், காதலுடன் வாழ்ந்து வருவதாக கூறினார். துல்கர் மற்றும் அமல் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளியில் படிக்கும் போது இருவரும் அதிகம் பேசியது கூட இல்லை. ஆனால் துல்கருக்கு 5 ஆம் வகுப்பு படிக்கும் போது தனது முதல் க்ரஷ் மனைவி மீது இருந்ததையும் கியூடாக வெளிப்படுத்தியுள்ளார்.
66
Dulquer Salmaan Wife
மலையாள திரையுலகில் அணைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படும் அழகிய ஜோடியாக இருக்கும் துல்கர் - அமல் ஜோடிக்கு மரியம் என்ற பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. ஏற்கனவே துல்கர் கொடுத்த பல பேட்டிகளில், அவர் மனைவி மீதான காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதே போல் மனைவி எந்த அளவுக்கு தனக்கு உறுதுணையாக இருந்துள்ளார் என்பதையும் தெரிவித்துள்ளார்.