சின்னத்திரை சீரியல்களுக்கான மவுசு மக்கள் இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தற்போது வாரத்தின் 7 நாட்களும் சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சீரியல்களுக்கு பதிலாக சிறப்பு நிகழ்ச்சிகளையும், புதுப் படங்களையும் போடுவார்கள், ஆனால் தற்போது சீரியல்களும் அந்த நாட்களில் ஒளிபரப்பப்படுகின்றன. அந்த அளவுக்கு சீரியல் மீதான மோகம் மக்கள் மத்தியில் உள்ளது.
25
Nayanthara
சீரியல்கள் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ரீச் ஆவதற்கு காரணம் அதன் விறுவிறுப்பான திரைக்கதை தான். சினிமாவை மிஞ்சும் அளவுக்கு அடுத்து என்ன என மக்களிடையே எதிர்பார்ப்பை தூண்டும் வகையிலான திரைக்கதையுடன் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதால் அதை சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்க தொடங்கி உள்ளனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சினிமா பிரபலங்கள் சிலரும் சன் டிவி சீரியல்களுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.
அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலை விரும்பி பார்த்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் சீரியல் ஒன்றை விரும்பி பார்ப்பாராம். அந்த சீரியல் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அது வேறெதுவுமில்லை, சன் டிவியில் சக்கைப்போடு போட்டு வரும் கயல் சீரியல் தான். சஞ்சீவ், சைத்ரா ரெட்டி நடித்துள்ள இந்த சீரியல் தான் நயன்தாராவுக்கு மிகவும் பிடிக்குமாம்.
45
Kayal Serial
இதனால் ஒரு எபிசோடு மிஸ் பண்ணாமல் பார்த்துவிடுவாராம் நயன். கயல் சீரியலில் சஞ்சீவ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சைத்ரா ரெட்டி நடித்து வரும் இந்த சீரியல் தான் தற்போது டிஆர்பி ரேஸிலும் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இந்த தகவல் கயல் சீரியல் குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளதாம். கயல் சீரியல் சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு பிரைம் டைம் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.
55
Nayanthara Movie Line Up
நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது தமிழில் மண்ணாங்கட்டி என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தை டியூடு விக்கி என்கிற யூடியூபர் இயக்கி உள்ளார். இதுதவிர கவினுக்கு ஜோடியாக ஹாய் என்கிற படத்திலும் நடித்து வருகிறார் நயன். மேலும் தெலுங்கு ராக்கிங் ஸ்டார் யாஷுக்கு அக்காவாக டாக்ஸிக் படத்திலும், மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக டியர் ஸ்டூடெண்ட்ஸ் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா.