43 வயதிலேயே மரணமடைந்த கங்குவா பட பிரபலம் - சோகத்தில் சூர்யா!

Published : Oct 30, 2024, 09:07 AM IST

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தில் எடிட்டராக பணியாற்றி உள்ள நிஷாத் யூசுப் இன்று காலை திடீரென மரணமடைந்துள்ளார்.

PREV
14
43 வயதிலேயே மரணமடைந்த கங்குவா பட பிரபலம் - சோகத்தில் சூர்யா!
Nishadh Yusuf, Bobby deol, Suriya

நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 14ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. கங்குவா திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அப்படத்தில் பணியாற்றிய பிரபலத்தின் மரணம் படக்குழுவை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கங்குவா படத்தின் படத்தொகுப்பாளார் நிஷாத் யூசுப் இன்று காலை மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 43.

24
Nishadh Yusuf death

நிஷாத் யூசுப் கொச்சியில் உள்ள அவரது அபார்ட்மெண்ட்டில் இருந்து பிணமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளார். நிஷாத் யூசுப் கங்குவா மட்டுமின்றி ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த புதுப்படத்திற்கும் படத்தொகுப்பாளராக கமிட் ஆகி இருந்தார். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. அவரது திடீர் மரணம் கங்குவா படக்குழுவினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நிஷாத் யூசுப் மலையாள திரையுலகிலும் பிசியாக பணியாற்றி வந்தார்.

இதையும் படியுங்கள்... "கங்குவா எனக்காக எழுதப்பட்ட கதை" இசை வெளியீட்டு விழாவில் சிவாவை மாட்டிவிட்ட ரஜினி!

34
RJ Balaji, Nishadh Yusuf

மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த தல்லுமலா படத்தில் பணியாற்றியதன் மூலம் பேமஸ் ஆனார் நிஷாத் யூசுப். இப்படத்திற்காக இவருக்கு கேரள அரசின் மாநில விருதும் வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் பசூகா என்கிற மலையாள படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார் நிஷாத் யூசுப். அவரின் இந்த திடீர் மரணம் மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

44
Nishadh Yusuf, Siva, Suriya

நிஷாத் யூசுப் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது சூர்யா மற்றும் வில்லன் நடிகர் பாபி தியோல் ஆகியோருடன் செல்பி எடுத்து மகிழ்ந்த நிஷாத் யூசுப் இன்று காலை மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார். அவரின் மரணம் குறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ரிலீசுக்கு முன்பே வேட்டையன், கோட் பட சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய கங்குவா!

click me!

Recommended Stories