ஓட்டுனர் இருக்கைக்கும் பின் இருக்கைக்கும் இடையே தடுப்பு போல இருப்பதால் பின்னால் என்ன நடக்கிறது என்று ஓட்டுநருக்கு தெரியவே தெரியாது. மேலும் மடக்கி வைத்துக் கொள்ள வசதியாக ஃபோல்டுஅவுட் மேஜைகள், வயர்லஸ் சார்ஜர், புத்தம் படிக்க ஏதுவாக ரீடிங் லைட், ஸ்டார் ஓட்டலில் இருப்பது போல பல பல கண்ணாடி என சகல வசதியும் காருக்குள்ளேயே இருக்கிறது. இன்னும் முக்கியமாக இந்த லெக்சஸ் காரிக்குள்ளேயே தண்ணீர், குளிர்பானங்களை வைத்துக்கொள்ள குட்டியாக இருக்கைக்கு அருகே பிரிஜ்ட் இருக்கிறது என்பது ஆச்சரியத்தில் வாழ்த்துகிறது. இது தவிர்த்து வெயில் காலத்திற்கு குளு குளுவென புல் சேட்டிலைட் ஏசி, குளிர்காலத்திற்கு வாமு் வெதர் என எந்த கிளைமேட்டடாக இருந்தாலும் இந்த காரில் ஜாலியாக ரைடு செல்லலாம்.