19 வருட திருமண வாழ்க்கையில்... ஒரு நாள் கூட சண்டை இல்லாமல் இல்லை! கணவர் பற்றி தனுஷின் சகோதரி போட்ட பதிவு!

First Published May 23, 2024, 5:59 PM IST

நடிகர் தனுஷின் அக்கா கார்த்திகா, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கணவருக்கு வித்தியாசமாக 19-ஆம் ஆண்டு திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவரின் வெற்றிக்கு பின்னர் இருப்பது இவரின் சகோதரர் செல்வ ராகவன் என்றால் அது மிகையாகாது. காரணம் தனுஷை ஹீரோவாக வைத்து இவர் இயக்கிய, புதுப்பேட்டை, காதல் கொண்டேன், போன்ற படங்கள் தனுஷை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அதே போல் தனுஷின் வெற்றிக்கு பின்னர் எப்போதுமே அவருடைய சகோதரிகள், பெற்றோர் ஆகியோரும் உள்ளனர். என்பதை தனுஷ் பல பட விழாக்களிக்கும் தெரிவித்துள்ளார்.

தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, அண்ணன் செல்வராகவன், ஆகியோர் எப்படி ரசிகர்களால் அதிகம் கவனிக்க படும் பிரபலன்களோ, அதே போல் தனுஷின் சகோதரிகள் செய்யும் விஷயங்களும் ரசிகர்கள் உற்று நோக்கி வருகிறார்கள்.

இரண்டாவது குழந்தை பிறந்தாச்சு.. புகைப்படத்துடன் அறிவித்த சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்! குவியும் வாழ்த்து!

தனுஷின் சகோதரிகளில் ஒருவரான மருத்துவர் கார்த்திகா, எப்போதுமே சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருவர். அடிக்கடி தன்னுடைய குடும்பத்தில் நடக்கும் விசேஷங்கள், மற்றும் தனுஷின் சிறிய வயது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.

கேப்டன் விஜயகாந்த் மறைந்த போது கூட, விஜயகாந்த் செய்த உதவியால் தான் மருத்துவம் பிடித்ததாகவும். என் படிப்புக்கு பணம் இல்லாமல் தந்தை கஷ்டப்பட்ட போது, உதவியவர் விஜயகாந்த் என்றும் அந்த உதவிக்கு எத்தனை நன்றிகள் கூறினாலும் ஈடாகாது என கூறி பதிவிட்டிருந்தார்.

ரத்னாவுக்காக பொங்கல் வைக்கும் பாக்கியம்.. சௌந்தரபாண்டி கொடுத்த ஷாக்! கோபத்தில் பரணி! அண்ணா சீரியல் அப்டேட்!

இந்நிலையில் கார்த்திகா தன்னுடைய கணவர் கார்த்திக்கிற்கு மிகவும் வித்தியாசமாக தன்னுடைய திருமண வாழ்க்கை தெரிவித்துள்ளார். 26 வருடங்களாக காதலித்து ஒன்றாக தான் இருக்கிறோம். திருமணம் ஆகி 19 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் ஒரு நாள் கூட சண்டை இல்லாமல் இருந்தது இல்லை. நம் சண்டைகள் இல்லாமல் நான் இல்லை... என்பதை புரிந்து கொண்டேன். நமக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். கணவர் காதலோடு முத்தம் கொடுக்கும் பழைய புகைப்படம் ஒன்றையும் இவர் வெளியிட அவை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த பதிவை தொடர்ந்து தனுஷின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலர்... இன்னும் பல வருடங்கள் காதல் குறையாமல் நீங்கள் வாழ வேண்டும் என கூறி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நடிப்புக்காக காதலனை கழட்டி விட்டுட்டு... பிரபல நடிகருடன் வெளிநாடுகளில் டேட்டிங் செய்யும் 28 வயது நடிகையா இவர்?

Latest Videos

click me!