Crime: பட்டப்பகலில் இளம் பெண் கொடூரக்கொலை; பேசுவதை நிறுத்தியதால் ஆண் நண்பர் வெறிச்செயல்

By Velmurugan s  |  First Published Jun 24, 2024, 4:36 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பேசுவதை நிறுத்திய இளம் பெண்ணை ஆண் நண்பர் பட்டப்பகலில் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி லெனின் தெருவைச் சேர்ந்தவர் மேகலா (வயது 25). இவருக்கு ஏற்கனவே பரமேஸ்வரன் என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த இரண்டு வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேகலா தனது தாயார் மற்றும் குழந்தைகளுடன் அவரது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் மேகலாவிற்கு மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஆனால், கடந்த ஒரு மாத காலமாக அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மேகலா, மணிகண்டனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும் மணிகண்டன் மீது பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர். 

Latest Videos

இங்கேயே தீக்குளித்து சாவேன்; திமுக.விற்கு எதிரான போராட்டத்தில் கார் மீது நின்று ஓ.எஸ்.மணியன் ஆவேசம்

இந்நிலையில் நேற்று மாலை மேகலா பெரிய கடை பஜாரில் உள்ள கடை ஒன்றில் பணியாரம் விற்பனை செய்வதற்காக பனியாரம் தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் ஏன் என்னுடன் சேர்ந்து வாழ வர மறுக்கிறாய் என கேட்டு ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேகலாவை சரமாரியாக முதுகு, கழுத்தில் குத்தி உள்ளார். 

இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மேகலா கடை வாசலிலேயே உயிரிழந்தார். இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பரமக்குடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மேகலாவை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். 

தேனியில் எம்.ஜி.ஆர். பாடலுக்கு சாமி ஆடிய பெண்; சாலையில் அங்க பிரதசட்ணம் - பதறிப்போன போலீஸ்

மேலும் மணிகண்டனை கைது செய்து பரமக்குடி நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தற்போது மேகலாவின் இரண்டு பெண்குழந்தைகளும் அவரது பாட்டியுடன் நிலைகுலைந்து காணப்படுகின்றனர். இது பார்ப்பவர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பட்டப் பகலில் இளம் பெண்ணை கொலை செய்த சம்பவம் பரமக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!