April Release Movies : எலக்‌ஷனுக்கு மத்தியில் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ள தமிழ் படங்களின் முழு லிஸ்ட் இதோ

First Published Mar 26, 2024, 2:17 PM IST

நாடாளுமன்ற தேர்தலுக்கு மத்தியில் வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆக உள்ள படங்களின் முழு பட்டியலை பார்க்கலாம்.

April Release Tamil Movies

பள்ளி மாணவர்களுக்கு தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் மார்ச் மாதம் முழுவதும் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. தற்போது தேர்வுகள் முடிந்து விடுமுறை தொடங்கி உள்ள நிலையில், அவர்களைக் கவரும் வகையில் ஏப்ரல் மாதம் வரிசையாக கமர்ஷியல் படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

கள்வன் (Kalvan)

பிவி ஷங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் கள்வன். இதில் பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக இவானா நடித்திருக்கிறார். பாடல்களுக்கு ஜிவி பிரகாஷும், பின்னணி இசையை ரேவாவும் அமைத்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் 4-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

பேமிலி ஸ்டார் (Family Star)

பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் பேமிலி ஸ்டார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இப்படமும் வருகிற ஏப்ரல் 5-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

ரோமியோ (Romeo)

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து ரோமியோ திரைப்படமும் ஏப்ரலில் தான் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். இப்படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது. இப்படம் ஏப்ரல் 11-ந் தேதி திரைக்கு வருகிறது.

இதையும் படியுங்கள்... பூமர் அங்கிள் முதல் ஆடுஜீவிதம் வரை... இந்த வாரம் மட்டும் தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா?

டியர் (Dear)

ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள டியர் படமும் ஏப்ரலில் தான் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 11-ந் தேதி ரோமியோ படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளது.

ரத்னம் (Rathnam)

ஹரி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ரத்னம். இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இது வருகிற ஏப்ரல் 26-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டாமாக ரிலீஸ் ஆக உள்ளது.

அரண்மனை 4 (Aranmanai 4)

சுந்தர் சி இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகி வரும் படம் அரண்மனை 4. இப்படத்தை இயக்கியுள்ளதோடு அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் சுந்தர் சி. இதில் ஹீரோயினாக தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். யோகிபாபு, விடிவி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படமும் ஏப்ரல் 26-ந் தேதி தான் திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... Nayanthara: உயிர் - உலகம் இருவரையும் மார்பில் சாய்த்துக்கொண்டு... தாய் பாசத்தை பொழியும் நயன்தாராவின் போட்டோஸ்!

click me!