திருமணத்தில் தேவதையாய் ஜொலிக்கும் நயன்...மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட கத்ரினாவின் காஸ்ட்யூம் டிசைனர் குழு

First Published Jun 9, 2022, 2:17 PM IST

Nayanthara Vignesh Shivan wedding: இன்றைய விக்கி -நயன்தாரா திருமணத்திற்காக மும்பையில் இருந்து கத்ரினாவின் காஸ்ட்யூம் டிசைனர் குழு சென்னை வந்திருக்கிறார்கள்.

Nayanthara and Vignesh Shivan

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  திருமணத்துக்காக 3 நாட்களுக்கு அந்த ஓட்டல் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.  ஒரு இரவுக்கு 1. 30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Nayanthara and Vignesh Shivan

மெஹந்தி விழாவுடன், கோலாகலமாக தொடங்கிய திருமண விழாவில், ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இன்று காலை சரியாக 10.20 மணிக்கு 25 புரோகிதர்கள் மந்திரம் ஓத இந்து முறைப்படி நயன்தாரவிற்கு விக்னேஷ் சிவன் தாலிகட்டினார்.  திருமணத்தில் ஷாருக்கான், ரஜினிகாந்த் இயக்குநர் மணிரத்னம், சரத்குமார், விஜய் சேதுபதி, கார்த்தி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்துள்ளனர்.

Nayanthara and Vignesh Shivan

மகாபலிபுரத்தில் உள்ள பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் இன்று நடைபெற்ற திருமணத்தை ஷாதி ஸ்குவாட் எனும் திருமண ஏற்பாட்டாளர்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்தி உள்ளனர். இதுவரை மணமக்களின் ஒரு புகைப்படம்  வெளியாகவில்லை. தேவதை போல் ஜொலிக்கும் நயன்தாராவின் புகைப்படம் பார்க்க அவரது ரசிகர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்.
 

Nayanthara and Vignesh Shivan

இந்நிலையில், இன்றைய விக்கி -நயன்தாரா திருமணத்திற்காக மும்பையில் இருந்து காஸ்ட்யூம் டிசைனர் குழு சென்னை வந்திருக்கிறார்கள். கத்ரினா கைப் -விக்கி கவுசல் திருமணத்தில் மணமக்களுக்கு ஆடை அணிகலன்கள் அலங்காரன் செய்த  காஸ்ட்யூம் டிசைனர்  குழுதான் நயனுக்கும், விக்கிக்கும் உடை உள்ளிட்ட அலங்காரங்களை செய்கின்றனர், கடந்த ஒரு வரமாக இந்த குழு சென்னையில் தான் இருக்கிறர்களாம். இதனால், புகைப்படத்தில் நயன்தாரா நிச்சயம் தேவையாய் ஜொலிப்பார், என்று எதிர்பாக்கப்படுகிறது 


மேலும் படிக்க....Nayanthara Vignesh: நயன்- விக்கி திருமண ரிசார்டின் வாடகை எவ்வளவு? யம்மாடியோவ்..விலையை கேட்டால் தலையே சுத்துது

click me!