தனக்கு எதிராக ராகுல் காந்தி கூறிய அவதூறான வார்த்தை.. பிரதமர் மோடி சொன்ன பதில்..

By Ramya s  |  First Published Apr 25, 2024, 5:53 PM IST

தனக்கு எதிராக ராகுல் காந்தி பயன்படுத்திய அவதூறான வார்த்தைகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 25) மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் நடந்த விஜய் சங்கல்ப் பேரணியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ராகுல் காந்தியின் கீழ்த்தரமான கருத்துக்களால் மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று வலியுறுத்தினார். பாஜகவுக்கு தொண்டர்கள் தான் முக்கியம் என்றும், காங்கிரஸை பொருத்து வரை வாரிசு அரசியல் செய்கிறது என்றும் அவர் கூறினார். எனவே காங்கிரஸ் செய்யும் அவமானங்கள் தன்னைப் போன்ற தாழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு புதிதல்ல என்றும் தெரிவித்தார்..

இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "எனக்கு எதிராக காங்கிரஸின் இளவரசன் கூறிய இழிவான கருத்துக்களால் மக்கள் வருத்தமும் கோபமும் அடைய வேண்டாம் என்று கைகளை கூப்பி கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் தொண்டர்கள் அவர்கள் வாரிசுகள்.. அவர்கள் பல ஆண்டுகளாக நம்மை அவமதித்து வருவதால் இதில் புதிதாக எதுவும் இல்லை. 

The Prime Minister responded to the insulting language used by Rahul Gandhi against him. pic.twitter.com/J2EJz95AeR

— Asianet Newsable (@AsianetNewsEN)

Tap to resize

Latest Videos

 

எனவே, மக்கள் அவரைப் பற்றி யோசித்து நேரத்தை வீணாக்காதீர்கள், அவர் (ராகுல் காந்தி) மிகவும் வருத்தமாகவும், கலக்கமாகவும் இருக்கிறார், சில நாட்களில் அவர் நம்மை அவமானப்படுத்துவார். நாங்கள் சாமானியர்கள், நான் சாதாரண ஏழை குடும்ப பின்னணியில் இருந்து வந்தவன், அதனால் இதுபோன்ற அவமானங்கள் எனக்கு இது புதிதல்ல" என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு: விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்!

இதனிடையே பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் நடத்தை வீதிகளை பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையம் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மதம், ஜாதி, சமூகம் அல்லது மொழியின் அடிப்படையில் பகைமை மற்றும் பிரிவினையைத் தூண்டுவதாக பாஜகவும் காங்கிரஸும் குற்றம் சாட்டின.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 77வது பிரிவை தேர்தல் ஆணையம் செயல்படுத்தியுள்ளது, மோடி மற்றும் காந்திக்கு எதிரான தேர்தல் விதி மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் காலக்கெடு விதித்துள்ளது.

இந்த பாஜக பெண் வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.221 கோடி.. வியக்க வைக்கும் சொத்து விவரம்..

முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற நிலையில், அடுத்த கட்டங்கள் மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. , மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 வரை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

click me!