கோவையில் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில், போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் வாக்களித்த மையோடு போராட்டத்தில் கலந்து கொண்ட சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவானது தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று நடந்தன. கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் 64% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையிலே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டு இருப்பதாக குண்டை தூக்கிப் போட்டார்.
இது தொடர்பாக பாஜகவினர் தங்களின் ஆதரவாளர்கள் வாக்குகள் பட்டியலில் இருந்து நீக்கி இருப்பதாக புகார் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்பொழுது போராட்டத்திற்கு வந்திருந்த பாஜகவினர் பலர், ஓட்டு போட்டு இருப்பது தெரிய வந்தது.
ஓட்டு போடும் பொழுது அவர்களின் விரல்களில் பூசப்பட்ட நீல நிற மை அழியாமலே இருந்தன. அப்படி இருக்கையில் என் வாக்கு என் உரிமை, நான் உயிரோடு இருக்கிறேன் என் வாக்கு இல்லை. தேர்தலில் வாக்கு மட்டும் நீக்கப்படவில்லை ஜனநாயகமும் நீக்கிவிட்டார்கள் என புகார் தெரிவித்து, பதாகைகளை ஏந்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஓட்டு இல்லை என்று சொல்பவர்கள் தங்களின் விரல்களில் எவ்வாறு ப்ளூ மை வந்தது என்ற கேள்வி எழுந்திருக்கின்றன.
அரசுப் பேருந்தில் இருந்து இருக்கையோடு சாலையில் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அமைச்சர் விளக்கம்
ஒருவேளை இவர்கள் கள்ள ஓட்டு போட்டார்களா என்ற விமர்சனங்களும் எழுந்து இருக்கின்றன. இது தொடர்பாக பேசிய பாஜகவினர் தங்களுக்காக இந்த போராட்டம் இல்லை என்றும், வாக்களிக்காத நபர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டதாக சமாளித்தனர். தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை நடிகர் சூரி மாட்டிக்கிட்ட பங்கு என சொல்லும் வசனம் நினைவு கூறும் வகையில் பாஜகவின் போராட்டம் அமைந்தது.