ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள D-SIB பட்டியலின்படி தற்போது, இந்தியாவில் மூன்று வங்கிகள் பாதுகாப்பான வங்கிகளாகக் கருதப்படுகின்றன. ஆனால், இந்த மூன்று வங்கிளைத் தவிர மற்ற வங்கிகள் எல்லாம் பலவீனமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை என்று நினைக்க வேண்டாம்.
இந்த காலத்தில் அனைவரும் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்கள். சேமிப்புக் கணக்கு, பிக்ஸட் டெபாசிட் கணக்கு என பல வகைகளில் தங்கள் பணத்தை முதலீடு செய்கிறார்கள். வாடிக்கையாளர்கள் போடும் பணத்தை வங்கிகள் பத்திரமாக காப்பீடு செய்வதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.
ரிசர்வ் வங்கி உறுதிசெய்யும் காப்பீடு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும். அதாவது வங்கி திவால் ஆகிவிட்டால், கணக்கில் எவ்வளவு தொகையை இருந்தாலும், அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மட்டுமே கிடைக்கும். எனவே, திவால் நிலைக்குச் செல்ல வாய்ப்பு இல்லாத பாதுகாப்பான வங்கியில் மட்டுமே பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.
இலவச லேப்டாப் திட்டம் பற்றிய தகவல் தவறானது: இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு விளக்கம்
D-SIB வங்கிகள்:
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள D-SIB பட்டியலின்படி தற்போது, இந்தியாவில் மூன்று வங்கிகள் பாதுகாப்பான வங்கிகளாகக் கருதப்படுகின்றன. இந்த வங்கிகள் பெரிய நெருக்கடியைச் சந்திக்கும்போது ரிசர்வ் வங்கியே மத்திய அரசுடன் சேர்ந்து அந்த வங்கியை மீட்டெடுக்கு முயற்சி செய்யும். இந்த வங்கிகள் தான் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கை வைத்துள்ளன என்பதுதான் இதற்குக் காரணம்.
பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய மூன்று வங்கிகள் ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பான வங்கிகள் பட்டியலில் உள்ளன. இதுபோன்ற பட்டியலை 2015ஆம் ஆண்டு முதல் ஆர்.பி.ஐ வெளியிட்டு வருகிறது. 2017ஆம் ஆண்டில் இருந்து ஹெச்.டி.எஃப்.சி வங்கி முதல் முறையாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்தது.
பாதுகாப்பான வங்கிகள்:
வங்கிகளின் முக்கியத்துவத்தைப் ரிசர்வ் வங்கி 5 நிலைகளாக வகைப்படுத்தி இருக்கிறது. ஐந்தாவது நிலையில் உள்ள வங்கிகள் மிகவமு் பாதுகாப்பானவையாகக் கருதப்படும். இப்போது எஸ்பிஐ மட்டுமே 5ஆம் நிலையில் இருக்கிறது. ஹெச்.டி.எப்.சி. வங்கியும், ஐசிஐசிஐ வங்கியும் 4ஆம் நிலையிலேயே உள்ளன.
ஆனால், இந்த மூன்று வங்கிளைத் தவிர மற்ற வங்கிகள் எல்லாம் பலவீனமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை என்று நினைக்க வேண்டாம். ரிசர்வ் வங்கி D-SIB எனப்படும் பாதுகாப்பான வங்கிகள் பட்டியலில் ஒரு வங்கியைச் சேர்க்க வேண்டும் என்றால், அந்த வங்கியின் மொத்த சொத்து மதிப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்திற்கு அதிகமாக இருக்க வேண்டும்.
நாட்டின் ஜிடிபியில் 2 சதவீத்துக்கு மேல் வைத்திருக்கும் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் D-SIB பட்டியலில் இடம்பிடிக்கின்றன.
கோடக் மஹிந்திரா வங்கிக்கு கட்டுபாடுகள் விதித்த ரிசர்வ் வங்கி! விதிகளை மீறியதால் அதிரடி நடவடிக்கை!