Sun TV Serial: சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சலுக்கு போட்டியாக சன் டிவியில் ஆரம்பமாகும் புத்தம் புதிய 6 சீரியல்கள்!

First Published Apr 25, 2024, 6:17 PM IST

சன் டிவி தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் சில... அடுத்தடுத்து முடிவுக்கு வர உள்ள நிலையில், 6 புதிய சீரியல்கள் ஆரம்பமாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

malli serial

மல்லி:

மல்லி சீரியல், சன் டிவியில் ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனி கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் நிக்கிதா ஹீரோயினாக நடிக்க விமல் வெங்கடேசன் ஹீரோவாக நடிக்கிறார். மனைவியை இழந்து மகளுடன் தனிமையில் வாழும், ஹீரோ வாழ்க்கையில் கிராமத்து பெண்ணான மல்லி எப்படி வருகிறார் என்பதே இந்த சீரியலின் கதைக்களம் என கூறப்படுகிறது.

ஆடுகளம்:

இதை தொடர்ந்து சன் டிவியில், ஒளிபரப்பான அன்பே வா சீரியல் மூலம் பிரபலமான டெல்னா டெவிஸ் ஹீரோயினாக நடிக்க உள்ள புதிய தொடர் தான், ஆடுகளம். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக விஜய் டிவி மௌனராகம் சீரியல் நாயகன் சல்மான் நடிக்கிறார். காதலை மையமாக வைத்து இந்த தொடர் உருவாக உள்ளது.

Ninaithen Vanthaai: சுடரை துரத்தி விட்ட மனோகரி! அடம் பிடிக்கும் அஞ்சலி நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய்!

வாரணம் ஆயிரம்:

விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரில், ஈரமான ரோஜாவே சீரியலில் திரவியத்திற்கு ஜோடியாக நடித்த ஸ்வாதி தான், ஹீரோயினாக நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகர் ரியாஸ் நடிக்க உள்ளர். இவர் இதற்க்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள், மந்திர புன்னகை போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். 

அதே போல் இன்னும் பெயரிடப்படாத சீரியல் ஒன்றும் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் கண்ணான கண்ணே சீரியலில், நடித்த நிமிஷா ஹீரோயினாக நடிக்க... ஹீரோவாக அருவி சீரியல் நாயகன் கார்த்திக் வாசு நடிக்கிறார். இந்த சீரியல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் இந்த சீரியல் குறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ramya Krishnan Net Worth: 53 வயதிலும் மகாராணி போல் வாழும் ரம்யா கிருஷ்ணா சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
 

இதை தொடர்ந்து, புதிய நாயகன் - நாயகிகளுடன்.. புன்னகை பூவே, தோழி ஆகிய சீரியல்களை ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியல்கள் எப்போது ஒளிபரப்பாக உள்ளது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!