Rekha Nair : மணமான MLAவுடன் திருமணமா? ரேகா நாயர் பற்றி வெளியான பரபரப்பு தகவல் - அவர் கொடுத்த பகீர் விளக்கம்!

First Published May 22, 2024, 9:07 PM IST

Actress Rekha Nair : பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனின் "இரவின் நிழல்" திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பய் பெற்ற நடிகை தான் ரேகா நாயர்.

Rekha

நடிகை ரேகா நாயர் நடிப்பை தாண்டி பெண்களின் உரிமை குறித்தும் அவர்களது சுதந்திரம் குறித்தும் துணிச்சலான பல கருத்துக்களை மேடையில் பேசி புகழ்பெற்றவர். தன்னை விமர்சித்த பயில்வான் ரங்கநாதனை கடற்கரையில் வைத்து இவர் லெப்ட் ரைட் வாங்கியது அனைவரும் அறிந்ததே.

Pushpa 2 : புஷ்பா 2.. நாளை வெளியாகும் மிரட்டலான அப்டேட்.. காத்திருக்கும் ராஷ்மிகா - என்னப்பா அது? முழு விவரம்!

Actress rekha

இவர் ஒரு பேட்டியில் பேசுகிறார் என்றால் நிச்சயம் அதில் சுவாரசியத்திற்கும், பரபரப்புக்கும் குறைவு இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தான் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக பரவும் தகவலுக்கு அவர் கொடுத்துள்ள பதில் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Actress rekha Nair

ஏற்கனவே திருமணமான எம்எல்ஏ ஒருவரை தற்பொழுது ரேகா நாயர் திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு பதில் அளித்த அவர், சம்பந்தப்பட்ட அந்த எம்எல்ஏவின் அப்பாவை தான் எனக்கு பழக்கம், சில மாரத்தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்பொழுது அவருடைய பேசியிருக்கிறேன். நாங்கள் அனைவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் தான். 

Kollywood Actress rekha

அப்படித்தான் எனக்கும் அவருடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த எம்எல்ஏவும் எனக்கு அப்படித்தான் பழக்கமானார். ஆனால் எனக்கும் எம்எல்ஏவுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்கின்ற கேள்விக்கு நீங்கள் அந்த எம்எல்ஏவிடம்  போய் பதில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று பரபரப்பு பதிலை கூறியுள்ளார். 

Dharsha Gupta : நீச்சல் குளமும் வெப்பமானது.. தண்ணீர் சொட்ட சொட்ட போஸ் கொடுக்கும் தர்ஷா குப்தா - ஹாட் பிக்ஸ்!

Latest Videos

click me!