Pushpa 2 Update : கடந்த 2021ம் ஆண்டு பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் தான் புஷ்பா.

நடிகர் அல்லு அர்ஜுனின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக மாறியது கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி உலக அளவில் வெளியான புஷ்பா திரைப்படம். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மிக நேர்த்தியான வில்லனாக அந்த திரைப்படத்தில் தோன்றி அனைவரையும் மிரட்டினார் என்றால் அது மிகையல்ல. 

மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் சமந்தா மற்றும் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தானா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். உலக அளவில் புஷ்பா திரைப்படம் சுமார் 360 கோடி ரூபாயை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சுமார் 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் சுகுமார் இயக்கத்தில் பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று புஷ்பா 2 - தி ரூல் திரைப்படம் வெளியாகிறது.

Kamal Haasan : இந்தியன் 2 இசை வெளியீடு.. நேரு ஸ்டேடியத்தில் கிடைத்த அனுமதி - பங்கேற்கும் இரு சூப்பர் ஸ்டார்ஸ்!

ஏற்கனவே இந்த திரைப்படத்தில் இருந்து நடிகர் அல்லு அர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தானாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை காலை இந்த திரைப்படத்திலிருந்து செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. தற்பொழுது இந்த பாடல் குறித்து ராஷ்மிகா மந்தான அளித்த தகவலின்படி இது அனைவராலும் மிகவும் விரும்பப்படும் ஒரு பாடலாக இருக்கும் என்றும் இதை ரசிகர்கள் எவ்வாறு ரசிக்கின்றார்கள் என்பதை காணத் தான் ஆவலாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். 

Scroll to load tweet…

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான அல்லு அர்ஜுன் கடந்த 1985 ஆண்டு முதல் தனது மூன்றாவது வயதில் இருந்தே நடித்து வருகிறார். புஷ்பா திரைப்படத்திற்கு பிறகு கடந்த மூன்று ஆண்டுகள் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த அல்லு அர்ஜுன் தற்பொழுது மீண்டும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.

மிகப்பெரிய பட்ஜெட் படம்.. ரஜினிகாந்த், நாகார்ஜுனா இருந்தும் அட்டர் பிளாப் ஆன படம் - எது தெரியுமா?