காலை வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா..? இதனால் பாதிப்பு ஏதேனும் ஏற்படுமா..?

By Kalai Selvi  |  First Published Jun 18, 2024, 1:53 PM IST

காலை வெறும் வயிற்றில் பாலை குடிப்பது நல்லதா? என்ற கேள்வி பலருக்கு உண்டு. இது குறித்து இங்கு பார்க்கலாம்.


பால் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. ஏனெனில், இதில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவாசிய பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

அதேவேளையில், இது மூளைக்கு ஊக்கமளிக்கிறது. ஏனெனில், பாலில் வைட்டமின் டி இருப்பதால், இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஆனால், காலை வெறும் வயிற்றில் பாலை குடிப்பது நல்லதா? என்ற கேள்வி பலருக்கு உண்டு. இது குறித்து இங்கு பார்க்கலாம்.

Latest Videos

undefined

இதையும் படிங்க:   பால் குடிக்க சரியான நேரம் எது தெரியுமா? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமா?

காலையில் வெறும் வயிற்றில் பாலை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

  • காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. ஏனெனில், இது நம் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் தேவையான கால்சியம், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
  • தினமும் காலை வெறும் வயிற்றில் பாலை குடித்து வந்தால் வாயு தொல்லை ஏப்பம் போன்ற பிரச்சனைகள் சரியாகும் என்று சிலர் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, பாலில் இருக்கும் கொழுப்பு வயிற்றின் மென்படலங்களில் படர்ந்து எரிச்சலை குறைக்க உதவுகிறது.
  • அதுமட்டுமின்றி, இதில் இருக்கும் புரதம் மற்றும் அதன் ஆற்றல் மூளையை அதிகரிக்க உதவுகிறது. இது ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும். எனவே, இதனால் பசி ஏற்படாது. இதனால் செரிமானம் அமைப்பும் ஜீரணமாக்கும். மேலும், இது மனதை கூர்மையாக்கி, எலும்புகளை வழி வலுவாக்கும்.

இதையும் படிங்க:  யாரெல்லாம் அதிகம் பால் குடிப்பீங்க... ஜாக்கிரதை..! ஷாக் ஆகாம இதை படிங்க...அப்புறம் உங்களுகே புரியும்..!!

காலையில் வெறும் வயிற்றில் பாலை குடித்தால் யாருக்கு தீமை:

  • சிலருக்கு பால் பொருட்கள் மீது ஒவ்வாமை இருக்கும். எனவே, இவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பாலை குடித்தால் வயிறு உப்புசம், வாயு தொல்லை, வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • அதுபோல, பாலில் கொஞ்சம் அசிட்டிக் தன்மை உள்ளது. எனவே, இதை வெறும் வயிற்றில் குடித்தால் சிலருக்கு அசிட்டி உற்பத்தி உடலில் அதிகரித்து ஏப்பம் (அ) இரைப்பை சுழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
  • சில மருந்துகளை எடுத்துக் கொள்ளும் நபர்கள் காலை வெறும் வயிற்றில் பாலை குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பாலில் கால்சியம் இருப்பதால், இதனால் மருந்துகள் செயல்படாது. மேலும், பாலில் இருக்கும் இரும்புச்சத்து முழுவதுமாக கிடைக்காது.
  • பாலியல் கலோரிகள் அதிகமாக இருப்பதால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
  • அதுபோல பாலில் இருக்கும் புரதம் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே, அப்படிப்பட்டவர்கள் பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது தவிர்க்க வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!