பப்புவா நியூ கினி அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணியானது 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பப்புவா நியூ கினிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய பப்புவா நியூ கினி அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் 12.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான லாக்கி ஃபெர்குசன் 4 ஓவர்கள் பந்து வீசி ஒரு ரன்கூட கொடுக்காமல் மெய்டனாக வீசியுள்ளார். மேலும், 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். தனது கடைசி டி20 போட்டியில் விளையாடிய டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும், டிம் சவுதி மற்றும் இஷ் ஜோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். டெவோன் கான்வே அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்துக் கொடுத்துள்ளார்.