வரலாற்று சாதனை படைத்த லாக்கி ஃபெர்குசன் – 4 ஓவர்கள் வீசி 4 மெய்டன் உள்பட 3 விக்கெட் கைப்பற்றி சாதனை!

By Rsiva kumarFirst Published Jun 18, 2024, 12:08 PM IST
Highlights

பப்புவா நியூ கினி அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் லாக்கி ஃபெர்குசன் 4 ஓவர்கள் வீசி 4 மெய்டன் உள்பட 3 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்க இருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் என்று 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நாளை 29ஆம் தேதி முதல் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்குகிறது.

இந்த நிலையில் தான் இன்று நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய பப்புவா நியூ கினி அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் நியூசிலாந்து வீரர் லாக்கி ஃபெர்குசன் 4 ஓவர்கள் வீசி ஒரு ரன் கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி டி20 உலகக் கோப்பை தொடரில் புதிய சாதனை படைத்துள்ளார்.

Latest Videos

இதற்கு முன்னதாக இப்படியொரு சாதனையை எந்த வீரரும் நிகழ்த்தவே இல்லை. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 12.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக இந்த தொடரில் நியூசிலாந்து விளையாடிய 4 போட்டியில் 2 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது.

click me!