சமீபத்தில் பாலியல் வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட 8 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் நிரபராதி என்று தீர்ப்பளிக்கபட்டு வெளியில் வந்த நேபாள் வீரர் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக 100 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வந்தன. கிட்டத்தட்ட குரூப் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்த நிலையில் தான் இன்று வங்கதேசம் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான 37ஆவது போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற நேபாள் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி வங்கதேசம் முதலில் விளையாடி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் எடுத்தது.
undefined
பவுலிங்கைப் பொறுத்த வரையில் நேபாள் வீரரான சந்தீப் லமிச்சனே 2 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை ஒன்றை படைத்தார். அதன்படி, டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக பாலியல் வழக்கில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றா. அதன் பிறகு நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு ஆண்டு காலமாக எந்தவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை.
மாறாக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அதோடு, டி20 உலகக் கோப்பை தொடருக்கான நேபாள் அணியிலும் இடம் பெறவில்லை. கடைசியாக கடைசி 2 போட்டிகளுக்கான நேபாள் அணியில் இடம் பெற்றார். எனினும் அமெரிக்கா வருவதற்கான யுஎஸ் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், கடைசியாக வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இடம் பெற்று விளையாடி புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் 53 டி20 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். லமிச்சனே 54 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். வணிந்து ஹசரங்கா 63 போட்டிகளிலும், ஹரீஷ் ராஃப் 71 போட்டிகளிலும், மார்க் அடையர் 70 போட்டிகளிலும் விளையாடி 100 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். இந்த தொடரில் நேபாள் விளையாடிய 4 போட்டிகளில் 3ல் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை.
Breaking: Sandeep Lamichhane becomes the second fastest bowler in the world to take 100 T20I wickets 🇳🇵🔥🔥
Haris Rauf is there in the list too, he's the fastest pacer to reach the landmark 🇵🇰❤️ pic.twitter.com/g3NxWRTPpF