டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா சூப்பர் 8 குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ளன.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வந்த டி20 உலகக் கோப்பை தொடரின் 9ஆவது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கிட்டத்தட்ட குரூப் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் என்று 8 அணிகள் சூப்பர் 8 சுற்று போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்த தொடரில் இடம் பெற்ற ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதில், இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம் பெற்ற நிலையில் விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்றது. ஆனால், கனடா அணிக்கு எதிரான போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய 8 அணிகளும் 4 அணியாக 2 பிரிவுகளாக பிரிந்து விளையாடுகின்றன. இதில் ஒரு பிரிவில் இடம் பெற்ற அணி மற்ற 3 அணிகளுடன் ஒரு முறை மோதும். இதில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
சூப்பர் 8 – குரூப் 1:
ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம்.
சூப்பர் 8 – குரூப் 2:
அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்.
இந்தியா விளையாடும் போட்டிகள்:
ஜூன் 20 – இந்தியா – ஆப்கானிஸ்தான் – பார்படாஸ் – இரவு 8 மணி
ஜூன் 22 – இந்தியா – வங்கதேசம் – ஆண்டிகுவா – இரவு 8 மணி
ஜூன் 24 – இந்தியா – ஆஸ்திரேலியா – செயிண்ட் லூசியா, இரவு 8 மணி