200 ரன்களுக்கு மேல் குவித்து இலங்கை சாதனை – வெற்றியோடு நாடு திரும்பும் இலங்கை!

By Rsiva kumarFirst Published Jun 17, 2024, 4:01 PM IST
Highlights

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெற்றியோடு நாடு திரும்புகிறது.

இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 38ஆவது போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் 46 ரன்களும், சரித் அசலங்கா 46 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் கடின இலக்கை துரத்திய நெதர்லாந்து அணியில் மைக்கேல் லெவிட் 31 ரன்களும், கேப்டனும், விக்கெட் கீப்பருமான ஸ்காட் எட்வர்ட்ஸ் 31 ரன்களும் எடுத்துக் கொடுக்கவே 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நெதர்லாந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Latest Videos

இதன் மூலமாக இலங்கை 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக இலங்கை விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வி மற்றும் ஒரு போட்டிக்கு முடிவு இல்லாத நிலையில் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இந்த போட்டியில் 200 ரன்கள் குவித்ததன் மூலமாக இலங்கை 2ஆவது அணியாக 201 ரன்கள் குவித்துள்ளது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவும் 201 ரன்கள் குவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!